Аль-МухтасарАн‑Ниса · 4:47–80

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Ан-Ниса 4:47–80

4:47Страница 86

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ ءَامِنُواْ بِمَا نَزَّلۡنَا مُصَدِّقٗا لِّمَا مَعَكُم مِّن قَبۡلِ أَن نَّطۡمِسَ وُجُوهٗا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدۡبَارِهَآ أَوۡ نَلۡعَنَهُمۡ كَمَا لَعَنَّآ أَصۡحَٰبَ ٱلسَّبۡتِۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولًا ٤٧

О те, кому было дано Писание! Уверуйте в то, что Мы ниспослали в подтверждение того, что есть у вас, пока Мы не стерли ваши лица и не повернули их назад, пока Мы не прокляли вас, как прокляли тех, которые нарушили субботу. Веление Аллаха непременно исполняется!

வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! நாம் உங்கள் முகங்களில் உள்ள புலன்களை நீக்கி அவற்றை உங்கள் பின்புறத்தில் வைப்பதற்கு முன்னர் அல்லது தடுக்கப்பட்ட சனிக்கிழமையில் தடையையும் மீறி மீன்பிடித்தவர்களைக் குரங்குகளாக உருமாற்றி என் அருளிலிருந்து தூரமாக்கியது போன்று உங்களையும் என் அருளிலிருந்து தூரமாக்குவதற்கு முன்னர் நாம் முஹம்மது மீது இறக்கியவற்றின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ள தவ்ராத்தையும் இன்ஜீலையும் உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளையும் விதியும் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.

4:48Страница 86

إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰٓ إِثۡمًا عَظِيمًا ٤٨

Воистину, Аллах не прощает, когда к Нему приобщают сотоварищей, но прощает все остальные (или менее тяжкие) грехи, кому пожелает. Кто же приобщает сотоварищей к Аллаху, тот измышляет великий грех.

நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளில் எந்த ஒன்றும் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இணைவைப்பு நிராகரிப்பு ஆகியவற்றைத்தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடுகிறான் அல்லது தனது நீதிக்கு ஏற்ப தான் நாடியவர்களை - அவர்கள் செய்த பாவங்களின் அளவு - தண்டித்துவிடுகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குபவர்கள் பெரும் பாவத்தையே கற்பனை செய்துள்ளனர். அதே நிலையிலேயே மரணித்துவிடுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

4:49Страница 86

أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمۚ بَلِ ٱللَّهُ يُزَكِّي مَن يَشَآءُ وَلَا يُظۡلَمُونَ فَتِيلًا ٤٩

Разве ты не видел тех, которые восхваляют сами себя? О нет! Аллах восхваляет, кого пожелает, и они не будут обижены даже на величину нити на финиковой косточке.

தூதரே! தங்களையும் தங்களின் செயல்களையும் பரிசுத்தப்படுத்தும் விதத்தில் புகழ்ந்து கொள்கிறார்களே அவர்களை உமக்குத் தெரியுமா? மாறாக அல்லாஹ் மட்டுமே தன் அடியார்களில் தான் நாடியவர்களைப் புகழ்ந்து பரிசுத்தப்படுத்துபவன். ஏனெனில் அவன்தான் உள்ளங்களின் இரகசியங்களை அறிந்தவன். அவர்கள் செய்த நன்மை பேரீச்சம் விதையில் இருக்கும் நூலளவு இருந்தாலும் அதுவும் அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது.

4:50Страница 86

ٱنظُرۡ كَيۡفَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَكَفَىٰ بِهِۦٓ إِثۡمٗا مُّبِينًا ٥٠

Посмотри, как они возводят навет на Аллаха! Этого достаточно, чтобы совершить явный грех!

தூதரே! அவர்கள் தம்மைத் தாமே புகழ்ந்து எவ்வாறு அல்லாஹ்வின்மீது அபாண்டமாகப் பொய் கூறுகிறார்கள் என்பதைப் பாரும். இதுவே அவர்களது வழிகேட்டைத் தௌிவுபடுத்தும் பாவத்துக்குப் போதுமானதாகும்.

4:51Страница 86

أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُؤۡمِنُونَ بِٱلۡجِبۡتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُواْ هَٰٓؤُلَآءِ أَهۡدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ سَبِيلًا ٥١

Разве ты не видел тех, кому дана часть Писания? Они веруют в джибта и тагута и говорят ради неверующих: «Эти следуют более верным путем, чем верующие».

தூதரே! அல்லாஹ்வால் கொஞ்சம் அறிவுவழங்கப்பட்ட யூதர்களைக் குறித்து உமக்குத் தெரியாதா? அவர்களின் நிலை உமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லையா? அவர்கள் அல்லாஹ்வைத் தவிர அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட தெய்வங்களை நம்புகிறார்கள். இன்னும் அவர்கள் இணைவைப்பாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, “முஹம்மதின் தோழர்களைவிட நீங்கள்தாம் நேரான வழியில் உள்ளீர்கள்.” எனவும் கூறுகிறார்கள்.

4:52Страница 87

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُۖ وَمَن يَلۡعَنِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ نَصِيرًا ٥٢

Они - те, кого проклял Аллах, а кого проклял Аллах, тому ты не найдешь помощника.

இது போன்ற கெட்ட கொள்கையுடையவர்களையே அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கியுள்ளான். யாரை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிடுவானோ அவருக்கு உதவிசெய்யக்கூடிய எந்தவொரு உதவியாளரையும் பெற்றுக்கொள்ள முடியாது.

4:53Страница 87

أَمۡ لَهُمۡ نَصِيبٞ مِّنَ ٱلۡمُلۡكِ فَإِذٗا لَّا يُؤۡتُونَ ٱلنَّاسَ نَقِيرًا ٥٣

Или же они обладают долей власти? Будь это так, то они не дали бы людям даже выемки на финиковой косточке.

அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் கொடுக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து எதையும் அவர்கள் மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். அது பேரீச்சங்கொட்டையின் மேற்புறம் இருக்கும் ஒரு புள்ளியின் அளவாக இருந்தாலும் சரியே.

4:54Страница 87

أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ فَقَدۡ ءَاتَيۡنَآ ءَالَ إِبۡرَٰهِيمَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَءَاتَيۡنَٰهُم مُّلۡكًا عَظِيمٗا ٥٤

Или же они завидуют тому, что Аллах даровал людям из Своей милости? Мы уже одарили род Ибрахима (Авраама) Писанием и мудростью и одарили их великой властью.

மாறாக அவர்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் அல்லாஹ் வழங்கிய தூதுத்துவம், ஈமான், ஆட்சியதிகாரம் ஆகியவற்றின்மீது பொறாமைகொள்கிறார்கள். அவர்கள் ஏன் பொறாமை கொள்கிறார்கள்? நாம் முன்னரே இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் வேதம் அல்லாத வேறு செய்திகளையும் வழங்கியுள்ளோம்! நாம் அவர்களுக்கு மக்களின்மீது விசாலமான ஆட்சியையும் வழங்கியுள்ளோம்!

4:55Страница 87

فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ بِهِۦ وَمِنۡهُم مَّن صَدَّ عَنۡهُۚ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا ٥٥

Среди них есть такие, которые уверовали в него (Мухаммада), и такие, которые отвернулись от него. Довольно того пламени, которое в Геенне!

இப்ராஹீமின் மீதும் அவருடைய வழித்தோன்றல்களில் வந்த தூதர்களின் மீதும் அல்லாஹ் இறக்கியருளியவைகளை நம்பிக்கைகொள்பவர்களும் வேதக்காரர்களில் இருக்கிறார்கள். அதனை நம்பிக்கைகொள்ளாது புறக்கணிப்போரும் அவர்களில் உள்ளனர். நம்பிக்கைகொள்வதிலிருந்தும் மக்களைத் தடுத்துவிடுகிறார்கள். இதுதான் முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்டவை குறித்தும் அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. அவர்களில் நிராகரிப்பவர்களுக்கு நரகமே தக்க தண்டனையாகும்.

4:56Страница 87

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا سَوۡفَ نُصۡلِيهِمۡ نَارٗا كُلَّمَا نَضِجَتۡ جُلُودُهُم بَدَّلۡنَٰهُمۡ جُلُودًا غَيۡرَهَا لِيَذُوقُواْ ٱلۡعَذَابَۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمٗا ٥٦

Воистину, тех, которые не уверовали в Наши знамения, Мы сожжем в Огне. Всякий раз, когда их кожа приготовится, Мы заменим ее другой кожей, чтобы они вкусили мучения. Воистину, Аллах - Могущественный, Мудрый.

நம்முடைய வசனங்களை நிராகரிப்பவர்களை மறுமைநாளில் நாம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் நரகத்தில் நுழைவித்துவிடுவோம். அது அவர்களின் தோல்களை எரித்துவிடும்போதெல்லாம் அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக நாம் வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. அவன் திட்டமிடுவதிலும் தீர்ப்பு செய்பவற்றிலும், ஞானம்மிக்கவன்.

4:57Страница 87

وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَنُدۡخِلُهُمۡ ظِلّٗا ظَلِيلًا ٥٧

А тех, которые уверовали и совершали праведные деяния, Мы введем в Райские сады, в которых текут реки. Они пребудут там вечно. У них там будут очищенные супруги. Мы введем их в густую тень.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களைப் பின்பற்றி நற்செயல்கள் புரிந்தவர்களை மறுமைநாளில் நாம் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அந்த சுவனங்களில் அவர்களுக்கு எல்லாவித அசுத்தங்களிலிருந்தும் தூய்மையான மனைவியரும் உண்டு. வெப்பமும் குளிர்ச்சியும் அற்ற அடர்த்தியான நீண்ட நிழல்களில் நாம் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.

4:58Страница 87

۞ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا وَإِذَا حَكَمۡتُم بَيۡنَ ٱلنَّاسِ أَن تَحۡكُمُواْ بِٱلۡعَدۡلِۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعَۢا بَصِيرٗا ٥٨

Воистину, Аллах велит вам возвращать вверенное на хранение имущество его владельцам и судить по справедливости, когда вы судите среди людей. Как прекрасно то, чем увещевает вас Аллах! Воистину, Аллах - Слышащий, Видящий.

நம்பிக்கையாளர்களே! உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். நீங்கள் மக்களிடையே அவர்களின் விவகாரங்களில் தீர்ப்பு வழங்கினால் அநீதி இழைக்காது மார்க்கம் தெளிவுபடுத்திய முறையில் நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஞாபகமூட்டுவதும் அனைத்து நிலமைகளிலும் உங்களுக்கு வழிகாட்டுவதும் சிறந்தவையே. அவன் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை பார்க்கக்கூடியவன்.

4:59Страница 87

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا ٥٩

О те, которые уверовали! Повинуйтесь Аллаху, повинуйтесь Посланнику и обладающим влиянием среди вас. Если же вы станете препираться о чем-нибудь, то обратитесь с этим к Аллаху и Посланнику, если вы веруете в Аллаха и Последний день. Так будет лучше и прекраснее по значению (или по исходу; или по вознаграждению)!

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் - அவர்கள் பாவமான விஷயங்களை ஏவாதவரை - கட்டுப்படுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் ஏதேனும் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும் அவனுடைய தூதரின் வழிமுறையின் பக்கமும் திரும்புங்கள். நீங்கள் கருத்து வேறுபாட்டில் தொடர்ந்திருப்பது, சொந்தக் கருத்தைக் கூறுவது ஆகியவற்றை விட குர்ஆனின் பக்கமும் சுன்னாவின் பக்கமும் திரும்புவதே சிறந்ததாகும். அதுவே உங்களுக்கு சிறந்த முடிவையும் தரக்கூடியதாகும்.

4:60Страница 88

أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزۡعُمُونَ أَنَّهُمۡ ءَامَنُواْ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓاْ إِلَى ٱلطَّٰغُوتِ وَقَدۡ أُمِرُوٓاْ أَن يَكۡفُرُواْ بِهِۦۖ وَيُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُضِلَّهُمۡ ضَلَٰلَۢا بَعِيدٗا ٦٠

Разве ты не видел тех, которые заявляют, что они уверовали в ниспосланное тебе и в ниспосланное до тебя, но хотят обращаться на суд к тагуту, хотя им приказано не веровать в него? Дьявол желает ввести их в глубокое заблуждение.

தூதரே! “உம்மீது இறக்கப்பட்டதன் மீதும் உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம்” என்று பொய்யாக வாதிடும் யூதர்களிலுள்ள நயவஞ்சகர்களது முரண்பாட்டை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிடம் தீர்வு தேடுகிறார்கள். அவற்றை நிராகரிக்கும்படியே அவர்கள் ஏவப்பட்டிருந்தார்கள். அவர்கள் சத்தியத்தை அடையமுடியாத அளவு ஷைத்தான் அவர்களை அதனை விட்டும் வெகுதூரமாக்க விரும்புகிறான்.

4:61Страница 88

وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيۡتَ ٱلۡمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودٗا ٦١

Когда им говорят: «Придите к тому, что ниспослал Аллах, и к Посланнику», - ты видишь, как лицемеры стремительно отворачиваются от тебя.

தூதரே! இந்த நயவஞ்சகர்களிடம், “உங்களிடையேயுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ் இறக்கிய வேதத்திலுள்ள தீர்ப்பின் பக்கமும், உங்களது பிரச்சினையில் தீர்ப்பு வழங்குவதற்காக தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால் உம்மைப் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு தீர்வுதேடி மற்றவர்களிடம் செல்வதை நீர் காண்பீர்.

4:62Страница 88

فَكَيۡفَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ ثُمَّ جَآءُوكَ يَحۡلِفُونَ بِٱللَّهِ إِنۡ أَرَدۡنَآ إِلَّآ إِحۡسَٰنٗا وَتَوۡفِيقًا ٦٢

А что будет, когда беда постигнет их за то, что приготовили их руки, после чего они придут к тебе и будут клясться Аллахом: «Мы хотели только добра и примирения»?

தூதரே! அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டு, “நாங்கள் உங்களைவிட்டுவிட்டு மற்றவர்களிடம் சென்றது எங்களிடையே நன்மையும் இணக்கமும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” எனஅல்லாஹ்வின் பெயரைக்கொண்டு சத்தியம் செய்து சாக்குப்போக்குக் கூறியவர்களாக உம்மிடம் வரும்போழுது அந்த நயவஞ்சகர்களின் நிலை எவ்வாறிருக்கும்?! அவர்கள் அந்த வாதத்தில் பொய்யர்களே. ஏனெனில் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைத் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதில்தான் நன்மை அடங்கியுள்ளது.

4:63Страница 88

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَعۡلَمُ ٱللَّهُ مَا فِي قُلُوبِهِمۡ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَعِظۡهُمۡ وَقُل لَّهُمۡ فِيٓ أَنفُسِهِمۡ قَوۡلَۢا بَلِيغٗا ٦٣

Аллах знает, что у них в сердцах. Посему отвернись от них, но увещевай их и говори им наедине (или говори им о них) убедительные слова.

இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் நயவஞ்சகத்தையும் கெட்ட எண்ணத்தையும் அல்லாஹ் நன்கறிவான். தூதரே! அவர்களைப் புறக்கணித்து விட்டு விடுவீராக. அவர்களுக்கு ஆர்வமூட்டியவாறும் எச்சரிக்கை செய்தவாறும் அல்லாஹ்வின் கட்டளைகளைத் தெளிவுபடுத்துவீராக. அவர்களின் உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிந்து உணர்வூட்டும் வார்த்தையைக் கூறுவீராக.

4:64Страница 88

وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذۡنِ ٱللَّهِۚ وَلَوۡ أَنَّهُمۡ إِذ ظَّلَمُوٓاْ أَنفُسَهُمۡ جَآءُوكَ فَٱسۡتَغۡفَرُواْ ٱللَّهَ وَٱسۡتَغۡفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُواْ ٱللَّهَ تَوَّابٗا رَّحِيمٗا ٦٤

Мы отправили посланников только для того, чтобы им повиновались с дозволения Аллаха. Если бы они, поступив несправедливо по отношению к себе, пришли к тебе и попросили прощения у Аллаха, если бы Посланник попросил прощения за них, то они нашли бы Аллаха Принимающим покаяния и Милосердным.

நாம் தூதர்களை அனுப்பியதெல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவனின் ஏற்பாட்டையும் கொண்டு அவர் கட்டளையிடும் விஷயங்களில் மக்கள் அவருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்த சமயத்தில் - நீர் உயிரோடு இருக்கும்போது - உம்மிடம் வந்து தாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொண்டு கைசேதப்பட்டு திருந்தியவர்களாக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால், நீரும் அவர்களுக்காக மன்னிப்புக் கோரினால் அவர்கள் அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் கண்டிருப்பார்கள்.

4:65Страница 88

فَلَا وَرَبِّكَ لَا يُؤۡمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيۡنَهُمۡ ثُمَّ لَا يَجِدُواْ فِيٓ أَنفُسِهِمۡ حَرَجٗا مِّمَّا قَضَيۡتَ وَيُسَلِّمُواْ تَسۡلِيمٗا ٦٥

Но нет - клянусь твоим Господом! - они не уверуют, пока они не изберут тебя судьей во всем том, что запутано между ними, не перестанут испытывать в душе стеснение от твоего решения и не подчинятся полностью.

ஆனால் உண்மையில் விடயம் நயவஞ்சகர்கள் கூறுவது போலல்ல. பின்னர் அல்லாஹ் தன்மீதே சத்தியமிட்டுக் கூறுகிறான், “அவர்கள் தங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தூதர் உயிரோடு இருக்கும்போது அவரிடமும் அவர் இறந்தபிறகு மார்க்க சட்டங்களிடமும் தீர்வு தேடி, அந்த தீர்வில் சந்தேகம்கொள்ளாமல் அதனை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்படும்வரை உண்மையான நம்பிக்கையாளர்களாக ஆக மாட்டார்கள்.”

4:66–68Страница 89

وَلَوۡ أَنَّا كَتَبۡنَا عَلَيۡهِمۡ أَنِ ٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ أَوِ ٱخۡرُجُواْ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٞ مِّنۡهُمۡۖ وَلَوۡ أَنَّهُمۡ فَعَلُواْ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَشَدَّ تَثۡبِيتٗا ٦٦

Если бы Мы предписали им: «Убейте самих себя (пусть невинные убьют беззаконников) или покиньте свои дома», - то лишь немногие из них совершили бы это. А если бы они совершили то, чем их увещевают, то так было бы лучше для них и сильнее укрепило бы их.

وَإِذٗا لَّأٓتَيۡنَٰهُم مِّن لَّدُنَّآ أَجۡرًا عَظِيمٗا ٦٧

Вот тогда Мы даровали бы им от Нас великую награду

وَلَهَدَيۡنَٰهُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ٦٨

и повели бы их прямым путем.

“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.

4:69Страница 89

وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَۚ وَحَسُنَ أُوْلَٰٓئِكَ رَفِيقٗا ٦٩

Те, которые повинуются Аллаху и Посланнику, окажутся вместе с пророками, правдивыми мужами, павшими мучениками и праведниками, которых облагодетельствовал Аллах. Как же прекрасны эти спутники!

அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டவர், இறைதூதர்கள், தூதர்கள் கொண்டுவந்ததை முழுமையாக உண்மைப்படுத்தி, அதன்படி செயல்பட்ட உண்மையாளர்கள், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகள், வெளிரங்கமும் அந்தரங்கமும் சீர்பெற்று நல்லமல்களுடைய நல்லவர்கள் ஆகிய அல்லாஹ்வின் அருளைப்பெற்றோருடன் சுவனத்தில் இருப்பார். சுவனத்தில் உள்ள இந்தத் தோழர்கள் எத்துணை சிறப்பானவர்கள்!.

4:70Страница 89

ذَٰلِكَ ٱلۡفَضۡلُ مِنَ ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمٗا ٧٠

Такова милость от Аллаха, и довольно того, что Аллах ведает о всякой вещи.

மேற்கூறப்பட்ட இந்த நன்மைகள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கும் கிருபையாகும். அவர்களின் நிலைமைகளை அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.

4:71Страница 89

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ خُذُواْ حِذۡرَكُمۡ فَٱنفِرُواْ ثُبَاتٍ أَوِ ٱنفِرُواْ جَمِيعٗا ٧١

О те, которые уверовали! Соблюдайте осторожность и выступайте отрядами или же выступайте все вместе.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் எதிரிகளுடன் போரிடுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுடன் போரிடுவதற்கு ஒரு படையின் பின் ஒரு படையாகவோ அனைவரும் ஒன்றுசேர்ந்தோ புறப்படுங்கள். இவையனைத்தும் உங்களின் நலன்களின் அடிப்படையிலும், எதிரிகளுக்கு சேதமும் தோல்வியும் ஏற்படும் விதத்திலும் நீங்கள் முடிவுசெய்ய வேண்டியதாகும்.

4:72Страница 89

وَإِنَّ مِنكُمۡ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنۡ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَالَ قَدۡ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيَّ إِذۡ لَمۡ أَكُن مَّعَهُمۡ شَهِيدٗا ٧٢

Воистину, среди вас есть такой, который задержится, и если вас постигнет несчастье, то он скажет: «Аллах оказал мне милость тем, что я не присутствовал рядом с ними».

முஸ்லிம்களே! உங்களில் தமது கோழைத்தனத்தால் எதிரிகளுடன் போரிடச் செல்லாமல் பின்தங்கக்கூடியவர்களும் ஏனையோரை பின்வாங்கச் செய்வோரும் இருக்கின்றார்கள். அவர்கள் நயவஞ்சகர்களும் பலவீனமான ஈமானுடையவர்களும் ஆவர். உங்களுக்கு உயிரிழப்போ தோல்வியோ ஏற்பட்டால், அவர்களில் ஒருவர் தான் தப்பியதை நினைத்து மகிழ்வடைந்து, “அல்லாஹ் என் மீது அருள்புரிந்ததனால் அவர்களுடன் சேர்ந்து போருக்கு நான் புறப்படவில்லை. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஏற்பட்டது எனக்கும் ஏற்பட்டிருக்கும்” என்று கூறுகின்றார்.

4:73Страница 89

وَلَئِنۡ أَصَٰبَكُمۡ فَضۡلٞ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمۡ تَكُنۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُۥ مَوَدَّةٞ يَٰلَيۡتَنِي كُنتُ مَعَهُمۡ فَأَفُوزَ فَوۡزًا عَظِيمٗا ٧٣

Если же вас постигнет милость от Аллаха, то он непременно скажет, словно между ним и вами никогда не было никакой дружбы: «Вот если бы я был вместе с ними и добился великого успеха!».

முஸ்லிம்களே! வெற்றி, போர்ச் செல்வம் போன்ற அல்லாஹ்வின் உதவி உங்களுக்குக் கிடைத்தால் போரைவிட்டுப் பின்தங்கியவன் உங்களுக்கும் அவனுக்கும் எந்த நட்போ தோழமையோ இல்லாததுபோல, “நான் அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்திருக்கக்கூடாதா! அவர்களைப்போன்று பெரும் வெற்றியைப் பெற்றிருப்பேனே!” என்று கூறுவான்.

4:74Страница 89

۞ فَلۡيُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشۡرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۚ وَمَن يُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَيُقۡتَلۡ أَوۡ يَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا ٧٤

Пусть сражаются на пути Аллаха те, которые покупают (или продают) мирскую жизнь за Последнюю жизнь. Того, кто будет сражаться на пути Аллаха и будет убит или одержит победу, Мы одарим великой наградой.

மறுமைக்குப் பகரமாக இவ்வுலக வாழ்க்கையை விற்ற உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்குவதற்காக அவனுடைய பாதையில் போர் புரியட்டும். அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்குவதற்காக அவனுடைய பாதையில் போரிட்டு கொல்லப்படுபவர் அல்லது எதிரியை வீழ்த்தி வெற்றி பெறுபவருக்கு அல்லாஹ் பெரும் நன்மையை வழங்குவான். அது சுவனமும் அவனது திருப்தியுமாகும்.

4:75Страница 90

وَمَا لَكُمۡ لَا تُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيّٗا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا ٧٥

Отчего вам не сражаться на пути Аллаха и ради слабых мужчин, женщин и детей, которые говорят: «Господь наш! Выведи нас из этого города, жители которого являются беззаконниками. Назначь нам от Себя покровителя и назначь нам от Себя помощника»?

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகவும் அவனுடைய பாதையில் போர் புரிவதை விட்டும் உங்களை தடுப்பது யாது? அந்தப் பலவீனமானவர்கள், “மக்காவிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக. அங்கு வசிக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அவனுடைய அடியார்களின்மீது வரம்பு மீறும் அநியாயக்காரர்களாக இருக்கின்றார்கள். எங்களைப் பராமரித்துப் பாதுகாக்கக்கூடியவரையும், எங்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளரையும் உன் புறத்திலிருந்து ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

4:76Страница 90

ٱلَّذِينَ ءَامَنُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱلطَّٰغُوتِ فَقَٰتِلُوٓاْ أَوۡلِيَآءَ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّ كَيۡدَ ٱلشَّيۡطَٰنِ كَانَ ضَعِيفًا ٧٦

Те, которые уверовали, сражаются на пути Аллаха, а те, которые не уверовали, сражаются на пути тагута. Посему сражайтесь с помощниками дьявола. Воистину, козни дьявола слабы.

உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் தமது தெய்வங்களின் பாதையில் போரிடுவார்கள். நீங்கள் ஷைத்தானின் உதவியாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள். அவ்வாறு அவர்களுடன் நீங்கள் போரிட்டால் வெற்றி பெறுவீர்கள். ஏனெனில் ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானது. அது அல்லாஹ்வையோ சார்ந்திருப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

4:77Страница 90

أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمۡ كُفُّوٓاْ أَيۡدِيَكُمۡ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ إِذَا فَرِيقٞ مِّنۡهُمۡ يَخۡشَوۡنَ ٱلنَّاسَ كَخَشۡيَةِ ٱللَّهِ أَوۡ أَشَدَّ خَشۡيَةٗۚ وَقَالُواْ رَبَّنَا لِمَ كَتَبۡتَ عَلَيۡنَا ٱلۡقِتَالَ لَوۡلَآ أَخَّرۡتَنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖۗ قُلۡ مَتَٰعُ ٱلدُّنۡيَا قَلِيلٞ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظۡلَمُونَ فَتِيلًا ٧٧

Разве ты не видел тех, кому было сказано: «Уберите руки (не пытайтесь сражаться), совершайте намаз и выплачивайте закят». Когда же им было предписано сражаться, некоторые из них стали бояться людей так, как боятся Аллаха, или даже более того. Они сказали: «Господь наш! Зачем Ты предписал нам сражаться? Вот если бы Ты предоставил отсрочку на небольшой срок!». Скажи: «Мирские блага непродолжительны, а Последняя жизнь лучше для того, кто богобоязнен. Вы же не будете обижены даже на величину нити на финиковой косточке».

தூதரே! உம்மிடம், “எங்கள்மீது போர் கடமையாக்கப்படக்கூடாதா” என்று கேட்ட உமது சில தோழர்களைக் குறித்து உமக்குத் தெரியுமா? அவர்களிடம் கூறப்பட்டது: “போர் புரியாமல் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஸகாத்தை வழங்கி வாருங்கள்.” இது போர் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் உள்ள நிலமையாகும். அதன் பின் மதீனாவை நோக்கி புலம்பெயர்ந்து இஸ்லாத்திற்கு பலம் கிடைத்தவுடன், போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலருக்கு அது சிரமமாகத் தோன்றியது. அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதுபோன்று அல்லது அதைவிட அதிகமாக மக்களுக்கு அஞ்சுவோராக மாறிவிட்டனர். அவர்கள் கூறினார்கள், எங்கள் இறைவா! எங்கள்மீது ஏன் போரைக் கடமையாக்கினாய்? நாங்கள் இவ்வுலகில் அனுபவிக்கும்வரை இன்னும் சிறிதுகாலம் அதனைத் தாமதப்படுத்தியிருக்கக்கூடாதா?” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: எவ்வளவுதான் இவ்வுலக இன்பங்கள் இருந்தாலும் அவைகள் அழியக்கூடிய அற்ப இன்பங்களேயாகும். அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நிலையான இன்பங்களே சிறந்ததாகும். உங்களின் நன்மைகளில் எதுவும் குறைக்கப்படாது. அது பேரீச்சங்கொட்டையின் நூலளவாக இருந்தாலும் சரியே.”

4:78Страница 90

أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ مُّشَيَّدَةٖۗ وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلّٞ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثٗا ٧٨

Смерть настигнет вас, где бы вы ни находились, даже если вы будете в возведенных башнях. Если их постигает добро, они говорят: «Это - от Аллаха». Если же их постигает зло, они говорят: «Это - от тебя». Скажи: «Это - от Аллаха». Что же произошло с этими людьми, что они едва понимают то, что им говорят?

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கான தவணை வந்துவிட்டால் மரணம் உங்களை அடைந்தே தீரும், நீங்கள் போர்க்களத்தைவிட்டு வெகுதூரமாக பாதுகாப்பான கோட்டையில் இருந்தாலும் சரியே. இந்த நயவஞ்சகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகமான வாழ்வாதாரமும் குழந்தைகளும் வழங்கப்பட்டால், “இவை அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவைதாம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களின் குழந்தைகளிலோ வாழ்வாதாரத்திலோ துன்பம் ஏற்பட்டுவிட்டால், நபியவர்களினால்தான் இந்த துரதிஷ்டம் ஏற்பட்டது எனக்கருதி “இந்த தீமைகள் உம்மால் ஏற்பட்டதுதான்” என்று கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “இன்பங்களும் துன்பங்களும் அல்லாஹ் ஏற்படுத்திய விதிகள்தாம். அனைத்தும் அவனிடமிருந்தே ஏற்பட்டது.” இவ்வாறு பேசும் இந்த மக்களுக்கு ஏன் நீர் கூறும் எதுவும் புரிவதாகத் தெரியவில்லை?.

4:79Страница 90

مَّآ أَصَابَكَ مِنۡ حَسَنَةٖ فَمِنَ ٱللَّهِۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٖ فَمِن نَّفۡسِكَۚ وَأَرۡسَلۡنَٰكَ لِلنَّاسِ رَسُولٗاۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا ٧٩

Любое благо, которое достается тебе, приходит от Аллаха. А любая беда, постигающая тебя, приходит от тебя самого. Мы отправили тебя посланником для людей. Довольно того, что Аллах является Свидетелем.

ஆதமுடைய மகனே! உனக்கு கிடைக்கக்கூடிய செல்வங்கள், குழந்தைகள் போன்ற இன்பங்கள் அல்லாஹ்விடமிருந்தே உனக்குக் கிடைப்பவையாகும். அது அல்லாஹ் உன்மீது பொழியும் அருளாகும். அவற்றில் உனக்கு வரக்கூடிய துன்பங்கள் நீ செய்த பாவங்களினால் ஏற்பட்ட விளைவேயாகும். தூதரே! மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து தூதுச் செய்தியை எடுத்துரைக்கும் தூதராக நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அல்லாஹ்விடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நீர் உண்மையாளரே என்பதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன். அவன் உமக்கு அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் வழங்கியுள்ளான்.

4:80Страница 91

مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا ٨٠

Кто повинуется Посланнику, тот повинуется Аллаху. А если кто отворачивается, то ведь Мы не отправили тебя их хранителем.

யார் தூதர் கூறியவற்றைச் செயல்படுத்தி, அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவராவார். தூதரே! யார் உமக்குக் கட்டுப்பட மறுக்கிறாரோ அவருக்காக நீர் கவலைப்படவேண்டாம். ஏனெனில் அவரது செயல்களைப் பாதுகாக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. மாறாக நாம்தாம் அவரது செயலை எண்ணுகிறோம், கணக்கிடுகிறாம்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English