Аль-Мухтасар · Тафсир · на тамильском
Ан-Ниса 4:81–106
4:81Страница 91
وَيَقُولُونَ طَاعَةٞ فَإِذَا بَرَزُواْ مِنۡ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٞ مِّنۡهُمۡ غَيۡرَ ٱلَّذِي تَقُولُۖ وَٱللَّهُ يَكۡتُبُ مَا يُبَيِّتُونَۖ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ٨١
Они говорят: «Мы покорны». Когда же они покидают тебя, некоторые из них по ночам замышляют не то, что ты говорил. Аллах записывает то, что они замышляют по ночам. Отвернись же от них и уповай на Аллаха. Довольно того, что Аллах является Попечителем и Хранителем!
இந்த நயவஞ்சகர்கள் தங்களின் நாவால், “நாங்கள் உமது கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம், அதனைச் செயல்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் உம்மைவிட்டுச் சென்றவுடன் அவர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் கூறியதற்கு மாறாக மறைவில் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சி செய்வதை அல்லாஹ் அறிகிறான். அவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு அவன் தண்டனை வழங்குவான். அவர்களின் பக்கம் கவனம் செலுத்தாதீர். அவர்கள் உமக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது. உமது காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பீராக. அவனையே நம்பி இருப்பீராக. நீர் நம்பிக்கை வைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
4:82Страница 91
أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَۚ وَلَوۡ كَانَ مِنۡ عِندِ غَيۡرِ ٱللَّهِ لَوَجَدُواْ فِيهِ ٱخۡتِلَٰفٗا كَثِيرٗا ٨٢
Неужели они не задумываются над Кораном? Ведь если бы он был не от Аллаха, то они нашли бы в нем много противоречий.
இவர்கள் ஏன் அல்குர்ஆனை சிந்திக்காமலும் படிக்காமலும் இருக்கின்றனர்? அவ்வாறு சிந்தித்திருந்தால் அல்குர்ஆனில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பது அவர்களுக்கு நிரூபனமாவதோடு, நீர் கொண்டுவந்தவை உண்மையே என்பதையும் புரிந்திருப்பர். இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதன் சட்டங்களில் தடுமாற்றத்தையும் கருத்துக்களில் ஏராளமான முரண்பாடுகளையும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:83Страница 91
وَإِذَا جَآءَهُمۡ أَمۡرٞ مِّنَ ٱلۡأَمۡنِ أَوِ ٱلۡخَوۡفِ أَذَاعُواْ بِهِۦۖ وَلَوۡ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُوْلِي ٱلۡأَمۡرِ مِنۡهُمۡ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسۡتَنۢبِطُونَهُۥ مِنۡهُمۡۗ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَٱتَّبَعۡتُمُ ٱلشَّيۡطَٰنَ إِلَّا قَلِيلٗا ٨٣
Когда до них доходит известие о безопасности или опасности, они разглашают его. Если бы они обратились с ним к Посланнику и обладающим влиянием среди них, то его от них узнали бы те, которые могут исследовать его. Если бы не милость и милосердие Аллаха к вам, то вы, за исключением немногих, последовали бы за дьяволом.
முஸ்லிம்களின் அமைதி, மகிழ்ச்சி அல்லது அச்சம், கவலை சம்பந்தமான ஏதாவது ஒரு செய்தி இந்த நயவஞ்சகர்களிடம் வந்தால் அதனைப் பரப்பிவிடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அல்லது முஸ்லிம்களின் விவகாரங்களை நிர்ணயிக்கும் பொறுப்புதாரர்கள், அறிவுடையவர்கள், விசுவாசமானவர்களிடம் விஷயத்தை கொண்டு சென்றிருந்தால் ஆராய்ந்தறிவோர் அச்செய்தியை இரகசியமாக வைப்பதா வெளியிடுவதா என்பதை முடிவுசெய்திருப்பார்கள். இறைநம்பிக்கையாளர்களே! இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ்வின் அருளும் அல்குர்ஆனின் மூலம் அவனது கருணையும் உங்களுக்குக் கிடைத்து இந்த நயவஞ்சகர்களை சோதித்ததை விட்டும் அவன் உங்களைப் பாதுகாத்திருக்காவிட்டால் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டங்களைப் பின்பற்றியிருப்பீர்கள்.
4:84Страница 91
فَقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفۡسَكَۚ وَحَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأۡسَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَٱللَّهُ أَشَدُّ بَأۡسٗا وَأَشَدُّ تَنكِيلٗا ٨٤
Сражайся на пути Аллаха, ведь ты несешь ответственность только за себя самого, и побуждай верующих. Быть может, Аллах удержит мощь неверующих. Аллах могущественнее всех и суровее в наказании.
தூதரே! அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய பாதையில் போர் புரிவீராக. மற்றவர்களைக் குறித்து நீர் விசாரிக்கப்பட மாட்டீர். அது உங்களுக்கு அவசியமுமற்றது. ஏனெனில் உம்மை மட்டுமே நீர் போரில் ஈடுபடுத்த முடியும். நம்பிக்கையாளர்களுக்கு போர் புரிய ஆர்வமூட்டுவீராக. அல்லாஹ் உங்களின் போராட்டத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் பலத்தை தடுத்துவிடலாம். அவன்தான் அதிக வல்லமைமிக்கவனாகவும் கடுந்தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
4:85Страница 91
مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ وَمَن يَشۡفَعۡ شَفَٰعَةٗ سَيِّئَةٗ يَكُن لَّهُۥ كِفۡلٞ مِّنۡهَاۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقِيتٗا ٨٥
Кто будет ходатайствовать хорошим заступничеством, тому оно станет уделом. А кто будет ходатайствовать дурным заступничеством, тому оно станет ношей. Аллах наблюдает за всякой вещью.
பிறருக்கு நன்மை ஏற்படுவதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அதன் நன்மையில் பங்கு உண்டு. பிறருக்கு தீங்கு செய்வதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அந்தப் பாவத்தில் பங்கு உண்டு. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நன்மை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. தீமை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.
4:86Страница 91
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَسِيبًا ٨٦
Когда вас приветствуют, отвечайте еще лучшим приветствием или тем же самым. Воистину, Аллах подсчитывает всякую вещь.
உங்களுக்கு யாராவது ஸலாம் கூறினால் அவர் கூறியதை விட சிறந்த முறையில் அவருக்குப் பதிலளியுங்கள். அல்லது அவர் கூறியது போன்றாவது பதிலளியுங்கள். அதனை விடச் சிறந்த முறையில் பதிலளிப்பதே ஏற்றமானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பாதுகாப்பவனாகவே இருக்கிறான். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
4:87Страница 92
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۗ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثٗا ٨٧
Аллах - нет божества, кроме Него! Он непременно соберет вас ко Дню воскресения, в котором нет сомнения. Чья речь правдивее речи Аллаха?
உண்மையாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் உங்களில் முதலாமவர், இறுதியானவர் என அனைவரையும் நீங்கள் செய்த செயல்களுக்குக் கூலி வழங்குவதற்காக எவ்வித சந்தேகமுமற்ற மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவன் வேறுயாரும் இல்லை.
4:88Страница 92
۞ فَمَا لَكُمۡ فِي ٱلۡمُنَٰفِقِينَ فِئَتَيۡنِ وَٱللَّهُ أَرۡكَسَهُم بِمَا كَسَبُوٓاْۚ أَتُرِيدُونَ أَن تَهۡدُواْ مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا ٨٨
Почему вы разошлись во мнениях относительно лицемеров на две группы? Аллах отбросил их назад за то, что они приобрели. Неужели вы хотите наставить на прямой путь того, кого ввел в заблуждение Аллах? Для того, кого Аллах ввел в заблуждение, ты никогда не найдешь дороги.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரு பிரிவினராகி விட்டீர்களே? உங்களில் ஒரு பிரிவினர் அந்த நயவஞ்சகர்கள் நிராகரித்துவிட்டதால் அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் அவர்கள் ஈமான் கொண்டுள்ளதால் அவர்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் விவகாரங்களில் கருத்துவேறுபாடு கொள்வது உங்களுக்கு உகந்ததல்ல. அவர்களின் செயல்களினால் அல்லாஹ் அவர்களை நிராகரிப்பின் பக்கமும் வழிகேட்டின் பக்கமும் திருப்பிவிட்டான். அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நேர்வழிகாட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு யாராலும் நேர்வழிகாட்ட முடியாது.
4:89Страница 92
وَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ كَمَا كَفَرُواْ فَتَكُونُونَ سَوَآءٗۖ فَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ أَوۡلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡۖ وَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ وَلِيّٗا وَلَا نَصِيرًا ٨٩
Они хотят, чтобы вы стали неверующими, подобно им, и чтобы вы оказались равны. Посему не берите их себе в помощники и друзья, пока они не переселятся на пути Аллаха. Если же они отвернутся, то хватайте их и убивайте, где бы вы их ни обнаружили. Не берите себе из них ни покровителей, ни помощников.
நயவஞ்சகர்கள் நிராகரித்ததுபோல நீங்கள் உங்களுக்கு இறக்கப்பட்டதை நிராகரித்து நீங்களும் அவர்களும் நிராகரிப்பில் சமமாகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் இணைவைப்பு நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு புலம்பெயரும்வரை அவர்களை அவர்களின் விரோதத்தினால் நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் இதனைப் புறக்கணித்து தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நீடித்தால் அவர்களைக் கண்ட இடத்தில் பிடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளர்களாகவோ உங்களின் எதிரிகளுக்கு எதிராக உதவும் உதவியாளர்களாகவோ அவர்களை ஆக்கிவிடாதீர்கள்.
4:90Страница 92
إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٌ أَوۡ جَآءُوكُمۡ حَصِرَتۡ صُدُورُهُمۡ أَن يُقَٰتِلُوكُمۡ أَوۡ يُقَٰتِلُواْ قَوۡمَهُمۡۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمۡ عَلَيۡكُمۡ فَلَقَٰتَلُوكُمۡۚ فَإِنِ ٱعۡتَزَلُوكُمۡ فَلَمۡ يُقَٰتِلُوكُمۡ وَأَلۡقَوۡاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمۡ عَلَيۡهِمۡ سَبِيلٗا ٩٠
Исключением являются те, которые присоединились к народу, с которым у вас есть договор, или которые пришли к вам с грудью, стесненной от нежелания сражаться против вас или против своего народа. Если бы Аллах пожелал, то позволил бы им одержать верх над вами, и тогда они непременно сразились бы с вами. Если же они отступили от вас, не стали сражаться с вами и предложили вам мир, то Аллах не открывает вам пути против них.
ஆயினும் நீங்கள் யாருடன் போர் நிறுத்தத்திற்கான உறுதியான ஒப்பந்தம் செய்துகொண்டீர்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களைத்தவிர. அல்லது மனநெருக்கடியால் உங்களுடனோ தங்கள் கூட்டத்துடனோ போரிட விரும்பாமல் உங்களிடம் வந்தவர்களைதவிர. அல்லாஹ் நாடினால் அவர்களை உங்கள்மீது ஆதிக்கம் செலுத்த வைத்திருப்பான். அவர்கள் உங்களுடன் போரிட்டிருப்பார்கள். அல்லாஹ் வழங்கிய ஆரோக்கியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களைக் கொலைசெய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ வேண்டாம். அவர்கள் உங்களைவிட்டும் ஒதுங்கி உங்களுக்கு எதிராகப் போரிடாமல், சமாதானம் கோரியோராக உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்களைக் கொலை செய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ அல்லாஹ் உங்களுக்கு எந்த வழியையும் ஏற்படுத்தவில்லை.
4:91Страница 92
سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأۡمَنُوكُمۡ وَيَأۡمَنُواْ قَوۡمَهُمۡ كُلَّ مَا رُدُّوٓاْ إِلَى ٱلۡفِتۡنَةِ أُرۡكِسُواْ فِيهَاۚ فَإِن لَّمۡ يَعۡتَزِلُوكُمۡ وَيُلۡقُوٓاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓاْ أَيۡدِيَهُمۡ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡۚ وَأُوْلَٰٓئِكُمۡ جَعَلۡنَا لَكُمۡ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا مُّبِينٗا ٩١
Вы обнаружите, что другие хотят получить гарантии безопасности от вас и от своего народа. Всякий раз, когда их возвращают в смуту, они опрокидываются в ней. Если они не отступят от вас, не предложат вам мира и не уберут свои руки, то хватайте их и убивайте, где бы вы их ни обнаружили. Мы предоставили вам очевидный довод против них.
நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது உயிர்களைக் காத்துக்கொள்வதற்காக உங்களிடம் ஈமானை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் சமூகத்தவரிடம் தப்பித்துக்கொள்வதற்காக அவர்களிடம் செல்லும்போது நிராகரிப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கமும், அவனுக்கு இணைகற்பிப்பதன் பக்கமும் அழைக்கப்பட்டால் உடனே பதிலளித்துவிடுகிறார்கள். இவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிடாமல் விலகவில்லை; சமாதானம் கோரி உங்களிடம் அடிபணிந்தவர்களாக வரவில்லை; உங்களை விட்டும் தங்கள் கைகளைத் தடுத்துக்கொள்ளவில்லை. எனவே இவர்களைக் கண்ட இடத்தில் பிடித்துக் கொலை செய்யுங்கள். இப்படிப்பட்ட பண்புடையவர்களை அவர்களின் துரோகம், சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக நீங்கள் பிடித்துக் கொலை செய்வதற்கு தெளிவான ஆதாரத்தை நாம் வழங்கிவிட்டோம்.
4:92Страница 93
وَمَا كَانَ لِمُؤۡمِنٍ أَن يَقۡتُلَ مُؤۡمِنًا إِلَّا خَطَـٔٗاۚ وَمَن قَتَلَ مُؤۡمِنًا خَطَـٔٗا فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖ وَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُواْۚ فَإِن كَانَ مِن قَوۡمٍ عَدُوّٖ لَّكُمۡ وَهُوَ مُؤۡمِنٞ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ وَإِن كَانَ مِن قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞ فَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦ وَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ تَوۡبَةٗ مِّنَ ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ٩٢
Верующему не подобает убивать верующего, разве что по ошибке. Кто бы ни убил верующего по ошибке, он должен освободить верующего раба и вручить семье убитого выкуп, если только они не пожертвуют им. Если верующий был из враждебного вам племени, то надлежит освободить верующего раба. Если убитый принадлежал к народу, с которым у вас есть договор, то надлежит вручить его семье выкуп и освободить верующего раба. Кто не сможет совершить этого, тому надлежит поститься в течение двух месяцев непрерывно в качестве покаяния перед Аллахом. Аллах - Знающий, Мудрый.
தவறுதலாகவேயன்றி ஒரு நம்பிக்கையாளனைக் கொல்வது நம்பிக்கையாளனுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. ஆயினும் ஒருவர் தவறுதலாக ஒரு நம்பிக்கையாளனைக் கொலை செய்துவிட்டால் தனது செயலுக்குப் பிராயசித்தமாக அவர் ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்யட்டும். கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் இழப்பீட்டுத் தொகையையும் கொன்றவரிடமிருந்து அனந்தரம் பெறத்தக்க உறவினர்கள் வழங்கிவிட வேண்டும். ஆயினும் கொல்லப்பட்டவரின் வாரிசுகள் இழப்பீட்டுத் தொகையைத் தள்ளுபடி செய்துவிட்டாலே தவிர. கொல்லப்பட்டவர் உங்களுடன் போர் புரியும் சமூகத்தைச் சார்ந்த நம்பிக்கையாளராக இருந்தால் கொன்றவர் தனது செயலுக்குப் பிராயசித்தமாக அவர் ஒரு அடிமையை விடுதலை செய்யட்டும். இழப்பீட்டுத் தொகை அவர்மீது கடமையில்லை. கொல்லப்பட்டவர் நம்பிக்கையாளராக அல்லாமல் உங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் இழப்பீட்டுத் தொகையை கொன்றவரிடமிருந்து அனந்தரம் பெறத்தக்க உறவினர்கள் வழங்கிவிட வேண்டும். கொலை செய்தவர் தனது செயலுக்கு பிராயசித்தமாக நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையையும் விடுதலை செய்துவிட வேண்டும். அவருக்கு உரிமைவிடத்தக்க அடிமை கிடைக்காவிடின் அல்லது அதற்கான பெறுமதியை வழங்குவதற்கு சக்தியில்லையெனில் அவர் செய்த காரியத்தை அல்லாஹ் மன்னிக்கும்பொருட்டு இரண்டு மாதங்கள் இடைவிடாமல் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் தன் அடியார்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவன் சட்டமியற்றுவதிலும் நிர்வகிப்பதிலும் ஞானம்மிக்கவன்.
4:93Страница 93
وَمَن يَقۡتُلۡ مُؤۡمِنٗا مُّتَعَمِّدٗا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدٗا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمٗا ٩٣
Если же кто-либо убьет верующего преднамеренно, то возмездием ему будет Геенна, в которой он пребудет вечно. Аллах разгневается на него, проклянет его и приготовит ему великие мучения.
வேண்டுமென்றே அநியாயமாக ஒரு நம்பிக்கையாளனைக் கொலை செய்பவர் அதனை அனுமதியாகக் கருதினால் அல்லது அச்செயலுக்கு பாவமன்னிப்புக் கோராவிட்டால் அவர் நிரந்தரமாக நரகத்தில் தங்கிவிடுவார். அல்லாஹ் அவர் மீது கோபம்கொள்வான். தன் அருளிலிருந்து அவரைத் தூரமாக்குவான். அவர் பெரும் பாவத்தை சம்பாதித்ததன் காரணமாக அவருக்கு அவன் கடுமையான வேதனையைத் தயார்படுத்திவைத்துள்ளான்.
4:94Страница 93
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا ضَرَبۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُواْ وَلَا تَقُولُواْ لِمَنۡ أَلۡقَىٰٓ إِلَيۡكُمُ ٱلسَّلَٰمَ لَسۡتَ مُؤۡمِنٗا تَبۡتَغُونَ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٞۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبۡلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَتَبَيَّنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ٩٤
О те, которые уверовали! Когда вы выступаете на пути Аллаха, то удостоверяйтесь и не говорите тому, кто приветствует вас миром: «Ты - неверующий», - стремясь обрести тленные блага мирской жизни. У Аллаха есть богатая добыча. Такими вы были прежде, но Аллах оказал вам милость, и посему удостоверяйтесь. Воистину, Аллах ведает о том, что вы совершаете.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போருக்காகப் புறப்பட்டால் நீங்கள் எதிர்த்துப் போரிடுவோர் விடயத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவரைப் பார்த்து, “நீ நம்பிக்கையாளன் அல்ல. உயிர், பொருளின் மீதுள்ள பயத்தினால்தான் இஸ்லாத்தை வெளிப்படுத்துகிறாய்” என்று கூறி, இவ்வுலகின் அற்ப ஆதாயமான போர்ச் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொலை செய்துவிடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன. அவை இவற்றைவிடச் சிறந்ததாகும். இதற்கு முன்னர் நீங்களும் தனது கூட்டத்தை விட்டும் தனது ஈமானை மறைக்கும் இவரைப் போன்றுதான் இருந்தீர்கள். அல்லாஹ் இஸ்லாத்தை வழங்கி உங்கள்மீது கிருபை செய்து உங்களது உயிர்களைப் பாதுகாத்தான். எனவே நன்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் எவ்வளவு சிறிய செயலும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
4:95Страница 94
لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ عَلَى ٱلۡقَٰعِدِينَ أَجۡرًا عَظِيمٗا ٩٥
Те из верующих, которые отсиживаются, не равны тем, которые сражаются на пути Аллаха своим имуществом и своими душами, кроме тех, кто испытывает тяготы. Аллах возвысил тех, которые сражаются своим имуществом и своими душами, над теми, которые отсиживаются, на целую степень, но каждому из них Аллах обещал Наилучшее (Рай). Аллах возвысил сражающихся над отсиживающимися благодаря великой награде -
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யாமல் பின்தங்கிய நம்பிக்கையாளர்களும் - நோய், பார்வையின்மை போன்ற காரணங்களால் பின்தங்கியவர்களைத்தவிர - அவனுடைய பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாதுசெய்தவர்களும் சமமாக மாட்டார்கள். போரைவிட்டு பின்தங்கியிருப்பவர்களைவிட தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்பவர்களை அந்தஸ்தில் அல்லாஹ் சிறப்பித்துள்ளான். முஜாஹிதுகள்,தகுந்த காரணத்தினால் பின்தங்குபவர்கள் என ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் அவர்களுக்குத் தகுந்த கூலியை வைத்துள்ளான்.பின்தங்குபவர்களை விட முஜாஹிதுகளுக்கு அல்லாஹ் பெரும் நன்மைகளை வழங்கி சிறப்பித்துள்ளான்.
4:96Страница 94
دَرَجَٰتٖ مِّنۡهُ وَمَغۡفِرَةٗ وَرَحۡمَةٗۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا ٩٦
ступеням от Него, прощению и милости. Аллах - Прощающий, Милосердный.
இந்த நன்மை, அல்லாஹ்வின் பாவமன்னிப்பு, கருணை என்பற்றுடன் கூடிய ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த அந்தஸ்துக்களாகும். அல்லாஹ் தன் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
4:97Страница 94
إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡ قَالُواْ فِيمَ كُنتُمۡۖ قَالُواْ كُنَّا مُسۡتَضۡعَفِينَ فِي ٱلۡأَرۡضِۚ قَالُوٓاْ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٗ فَتُهَاجِرُواْ فِيهَاۚ فَأُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَآءَتۡ مَصِيرًا ٩٧
Тем, кого ангелы умертвят чинящими несправедливость по отношению к самим себе, скажут: «В каком положении вы находились?». Они скажут: «Мы были слабы и притеснены на земле». Они скажут: «Разве земля Аллаха не была обширна для того, чтобы вы переселились на ней». Их обителью станет Геенна. Как же скверно это место прибытия!
முஸ்லிமல்லாத அந்நிய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயராமல் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது அவர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களிடம் கேட்பார்கள், “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்; இணைவைப்பாளர்களை விட்டும் எவ்விதத்தில் நீங்கள் வேறுபட்டிருந்தீர்கள்?” அதற்கு அவர்கள், “நாங்கள் பலவீனர்களாக இருந்தோம். எங்களிடம் எம்மை் பாதுகாத்துக்கொள்ளுமளவு எந்தப் பலமும் இருக்கவில்லை ” என்று சாட்டுப்போக்குக் கூறுவார்கள். வானவர்கள் அவர்களைப் பழித்துக் கூறுவார்கள், “அல்லாஹ்வின் பூமி விசாலமாக இருக்கவில்லையா? நீங்கள் புலம்பெயர்ந்து அங்குசென்று உங்களின் மார்க்கத்தையும் இழிவிலிருந்தும் அடக்குமுறையலிருந்தும் உங்களையும் பாதுகாத்திருக்கலாம் அல்லவா?”. புலம்பெயராத இவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது மிகவும் மோசமான தங்குமிடமாகவும் திரும்புமிடமாகவும் இருக்கின்றது.
4:98Страница 94
إِلَّا ٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ لَا يَسۡتَطِيعُونَ حِيلَةٗ وَلَا يَهۡتَدُونَ سَبِيلٗا ٩٨
Это не относится только к тем слабым мужчинам, женщинам и детям, которые не могут ухитриться и не находят правильного пути.
இந்த எச்சரிக்கையிலிருந்து காரணங்களுடைய பலவீனர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர். அவர்கள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரியே. அநியாயத்தையும் அடக்குமுறையையும் தடுப்பதற்கு அவர்களிடம் எந்தப்பலமும் இல்லை. அவற்றிலிருந்து தப்பிச்செல்வதற்கான எந்த வழியும் அவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் தன் அருளால் அவர்களை மன்னித்துவிடலாம். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
4:99Страница 94
فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا ٩٩
Таких Аллах может простить, ведь Аллах - Снисходительный, Прощающий.
இந்த எச்சரிக்கையிலிருந்து காரணங்களுடைய பலவீனர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர். அவர்கள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரியே. அநியாயத்தையும் அடக்குமுறையையும் தடுப்பதற்குரிய எந்தப் பலமும் அவர்களிடம் இல்லை. அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழியும் அவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் தன் அருளால் அவர்களை மன்னித்துவிடலாம். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
4:100Страница 94
۞ وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ١٠٠
Кто совершает переселение на пути Аллаха, тот найдет на земле много пристанищ и изобилие. Если же кто-либо покидает свой дом, переселяясь к Аллаху и Его Посланнику, после чего его настигает смерть, то его награда ложится на Аллаха. Аллах - Прощающий, Милосердный.
யார் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக இஸ்லாமிய நாட்டினை நோக்கிப் புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டாரோ அவர் புலம்பெயரும் பூமியில் அவர்விட்டுவந்த இடத்தை விட மாற்றமான இடத்தை கண்டுகொள்வார். அங்கு கண்ணியத்தையும் விசாலமான வாழ்வாதாரத்தையும் பெறுவார். யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கி புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டு பின்னர் அந்த இடத்தை அடைவதற்கு முன்னரே அவருக்கு மரணம் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் அவருக்கு கூலி உறுதியாகிவிட்டது. அவர் புலம்பெயர நாடிய இடத்தை அடையாததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
4:101Страница 94
وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا ١٠١
Когда вы странствуете по земле, то на вас не будет греха, если вы укоротите некоторые из намазов, если вы опасаетесь искушения со стороны неверующих. Воистину, неверующие являются вашими явными врагами.
நீங்கள் பூமியில் பயணம் செய்தால், நிராகரிப்பாளர்களால் ஏதேனும் தீங்கு உங்களுக்கு நேரலாம் என்று நீங்கள் அஞ்சினால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கிக் கொள்வதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்களின் உங்கள் மீதான எதிர்ப்பு பகிரங்கமானதாகும். யுத்தமற்ற பாதுகாப்பான நிலையிலும், பிராயணத்தில் கருக்ககுவதும் அனுமதிக்கப்பட்டதே என்ற சட்டம் ஆதாரபூர்வமான நபிவழியில் இடம்பெற்றுள்ளது.
4:102Страница 95
وَإِذَا كُنتَ فِيهِمۡ فَأَقَمۡتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلۡتَقُمۡ طَآئِفَةٞ مِّنۡهُم مَّعَكَ وَلۡيَأۡخُذُوٓاْ أَسۡلِحَتَهُمۡۖ فَإِذَا سَجَدُواْ فَلۡيَكُونُواْ مِن وَرَآئِكُمۡ وَلۡتَأۡتِ طَآئِفَةٌ أُخۡرَىٰ لَمۡ يُصَلُّواْ فَلۡيُصَلُّواْ مَعَكَ وَلۡيَأۡخُذُواْ حِذۡرَهُمۡ وَأَسۡلِحَتَهُمۡۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ تَغۡفُلُونَ عَنۡ أَسۡلِحَتِكُمۡ وَأَمۡتِعَتِكُمۡ فَيَمِيلُونَ عَلَيۡكُم مَّيۡلَةٗ وَٰحِدَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن كَانَ بِكُمۡ أَذٗى مِّن مَّطَرٍ أَوۡ كُنتُم مَّرۡضَىٰٓ أَن تَضَعُوٓاْ أَسۡلِحَتَكُمۡۖ وَخُذُواْ حِذۡرَكُمۡۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا ١٠٢
Когда ты находишься среди них и руководишь их намазом, то пусть одна группа из них встанет вместе с тобой, и пусть они возьмут свое оружие. Когда же они совершат земной поклон, пусть они находятся позади вас. Пусть затем придет другая группа, которая еще не молилась, пусть они помолятся вместе с тобой, будут осторожны и возьмут свое оружие. Неверующим хотелось бы, чтобы вы беспечно отнеслись к своему оружию и своим вещам, дабы они могли напасть на вас всего один раз (покончить с вами одним разом). На вас не будет греха, если вы отложите свое оружие, когда испытываете неудобство от дождя или больны, но будьте осторожны. Воистину, Аллах приготовил неверующим унизительные мучения.
தூதரே! போர்ச்சமயத்தில் நீர் படையில் இருந்து அவர்களுக்குத் தொழுகை நடத்த விரும்பினால் அவர்களை இரண்டு அணியினராக பிரித்துக் கொள்வீராக. ஒரு அணியினர் உம்முடன் தொழுவதற்காக நிற்கட்டும். தங்களுடைய ஆயுதங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். மற்றொரு அணியினர் உங்களைப் பாதுகாக்கட்டும். முதல் அணியினர் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதபிறகு இரண்டாவது ரக்அத்தை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தொழுதவுடன் உங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளின் திசையை நோக்கி நிற்கட்டும். உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இரண்டாவது அணியினர் வந்து இரண்டாவது ரக்அத்தில் இமாமுடன் இணைந்துகொள்ளட்டும். இமாம் சலாம் கொடுத்தபிறகு அவர்கள் மீதமுள்ள ஒரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தங்களின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும். நிராகரிப்பாளர்கள் நீங்கள் உங்களின் ஆயுதங்களையும் தளபாடங்களையும் விட்டு கவனக்குறைவாக இருக்கும் சமயத்தில் உங்களைத் திடீரெனத் தாக்கிவிடலாம் என்று ஆசைகொள்கிறார்கள். மழையினாலோ உங்களுக்கு ஏற்பட்ட நோயினாலோ நீங்கள் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உங்கள்மீது எவ்விதக் குற்றமுமில்லை. உங்களால் இயன்றவற்றின் மூலம் உங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான்.
4:103Страница 95
فَإِذَا قَضَيۡتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذۡكُرُواْ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِكُمۡۚ فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا ١٠٣
Когда вы завершите намаз, то поминайте Аллаха стоя, сидя или лежа на боках. Когда же вы окажетесь в безопасности, то совершайте намаз. Воистину, намаз предписан верующим в определенное время.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகையிலிருந்து நிறைவேற்றிவிட்டால் நின்றநிலையிலும் அமர்ந்தநிலையிலும் ஒருக்களித்துப் படுத்தநிலையிலும் - என எல்லா நிலைகளிலும் துதித்துப் புகழ்வதன் மூலம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். பயம் உங்களைவிட்டு நீங்கி அமைதிநிலை ஏற்பட்டுவிட்டால் தொழுகையை அதன் நிபந்தனைகளோடும் கடமைகளோடும் சுன்னத்துக்களோடும் உங்களுக்குக் கட்டளையிட்டபடி முழுமையாக நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள்மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும். எனவே காரணமின்றி அதனைத் தாமதப்படுத்திவிடாதீர்கள். இது ஊரில் உள்ள சமயத்திற்குரிய சட்டமாகும். ஆனால் பயண சமயத்தில் நீங்கள் சேர்த்தும் சுருக்கியும் தொழுதுகொள்ளலாம்.
4:104Страница 95
وَلَا تَهِنُواْ فِي ٱبۡتِغَآءِ ٱلۡقَوۡمِۖ إِن تَكُونُواْ تَأۡلَمُونَ فَإِنَّهُمۡ يَأۡلَمُونَ كَمَا تَأۡلَمُونَۖ وَتَرۡجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرۡجُونَۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا ١٠٤
Не проявляйте слабости при преследовании врага. Если вы страдаете, то они тоже страдают так, как страдаете вы. Но вы надеетесь получить от Аллаха то, на что они не надеются. Аллах - Знающий, Мудрый.
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களான உங்களது எதிரிகளைத் தேடுவதில் பலவீனமடைந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்களினாலும் காயங்களினாலும் நீங்கள் வலியை உணர்ந்தால் உங்களைப்போல நிராகரிப்பாளர்களும் வலியை உணரத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்டதுபோன்று அவர்களுக்கும் ஏற்பட்டே உள்ளது. அவர்களின் பொறுமை உங்களின் பொறுமையைவிட அதிகமாகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்காத உதவியையும் நன்மையையும் நீங்கள் அவனிடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் தன் அடியார்களின் நிலமைகளை நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
4:105Страница 95
إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَآئِنِينَ خَصِيمٗا ١٠٥
Мы ниспослали тебе Писание с истиной, чтобы ты разбирал тяжбы между людьми так, как тебе показал Аллах. Посему не препирайся за изменников.
தூதரே! சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம், மக்களின் ஒவ்வொரு விவகாரங்களிலும் அல்லாஹ் உமக்குக் கற்றுத்தந்தபடி - உம் மனஇச்சைப்படியோ சுயஅறிவின்படியோ அல்ல - நீர் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக. தமக்குத் தாமே துரோகம் செய்து, நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றில் மோசடி செய்பவர்களிடத்தில் தமது உரிமையைக் கேட்போரைத் தடுத்து வாதாடுபவராக ஆகிவிடாதீர்.
4:106Страница 96
وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ١٠٦
Проси прощения у Аллаха, ведь Аллах - Прощающий, Милосердный.
அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருவீராக. தன்னிடம் மன்னிப்புக்கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии