Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Араф 7:38–68
7:38Страница 155
قَالَ ٱدۡخُلُواْ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ فِي ٱلنَّارِۖ كُلَّمَا دَخَلَتۡ أُمَّةٞ لَّعَنَتۡ أُخۡتَهَاۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُواْ فِيهَا جَمِيعٗا قَالَتۡ أُخۡرَىٰهُمۡ لِأُولَىٰهُمۡ رَبَّنَا هَٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمۡ عَذَابٗا ضِعۡفٗا مِّنَ ٱلنَّارِۖ قَالَ لِكُلّٖ ضِعۡفٞ وَلَٰكِن لَّا تَعۡلَمُونَ ٣٨
Аллах скажет: «Войдите в Ад вместе с народами из числа людей и джиннов, которые прожили до вас». Каждый раз, когда один народ будет входить туда, он будет проклинать родственный ему народ. Когда же они будут собраны там вместе, то последние из них скажут о первых: «Господь наш! Это они ввели нас в заблуждение. Удвой же их мучения в Огне». Он скажет: «Всем воздастся вдвойне, но вы не знаете этого».
வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “இணைவைப்பாளர்களே! உங்களுக்கு முன் வழிகெட்ட, நிராகரித்த மனித, ஜின் இனத்தாருடன் சேர்ந்து நரகத்தில் நுழைந்துவிடுங்கள்.” அந்த சமூகங்களில் ஏதேனும் ஒரு சமூகம் நுழையும் போதெல்லாம் தமக்கு முன் நரகத்தில் இருக்கும் தம் சகோதர சமூகத்தை சபிக்கும். அவையனைத்தும் ஒன்று சேர்ந்தவுடன் இறுதியாக நுழைந்த சமூகமான கீழ்மட்டத்தினர்களும் பின்பற்றியோரும், முதலாவதாக நுழைந்த சமூகமான பெரியவர்களையும் தலைவர்களையும் பார்த்துக் கூறும்: “எங்கள் இறைவா! இந்த தலைவர்கள் தாம் எங்களை நேர்வழியை விட்டும் வழிகெடுத்துவிட்டார்கள். அவர்கள் எங்களுக்கு வழிகேட்டை அலங்கரித்துக் காட்டியதற்காக அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக.” அதற்கு அல்லாஹ் மறுத்து கூறுவான்: “உங்களில் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் வேதனையில் இரு மடங்கு பங்கு உண்டு. ஆயினும் நீங்கள் அவற்றை அறிந்து கொள்ளாமலும் புரியாமலும் உள்ளீர்கள்.”
7:39Страница 155
وَقَالَتۡ أُولَىٰهُمۡ لِأُخۡرَىٰهُمۡ فَمَا كَانَ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلٖ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ ٣٩
Тогда первые из них скажут последним: «Вы не были лучше нас. Посему вкусите наказание за то, что вы приобретали».
பின்பற்றப்பட்ட தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம் கூறுவார்கள்: “வேதனை குறைக்கப்படும் அளவுக்கு எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. நீங்கள் செய்த செயல்களே கவனத்தில் கொள்ளப்படும். அசத்தியத்தைப் பின்பற்றியதில் நீங்கள் எந்தச் சாக்குப் போக்கும் கூறமுடியாது. நாம் அனுபவிப்பதைப் போலவே, நீங்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் வேதனையை அனுபவியுங்கள்.”
7:40Страница 155
إِنَّ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَا لَا تُفَتَّحُ لَهُمۡ أَبۡوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلۡجَمَلُ فِي سَمِّ ٱلۡخِيَاطِۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُجۡرِمِينَ ٤٠
Воистину, не откроются врата небесные для тех, кто считал ложью Наши знамения и превозносился над ними. Они не войдут в Рай, пока верблюд не пройдет сквозь игольное ушко. Так Мы воздаем грешникам.
நம்முடைய தெளிவான வசனங்களைப் பொய்யெனக் கூறி அவற்றுக்கு அடிபணியாமல் கர்வம் கொண்டவர்கள் எல்லா நன்மைகளை விட்டும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களின் நிராகரிப்பினால், அவர்களது செயல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. பெரும் மிருகங்களில் ஒன்றாகிய ஒட்டகம் மிகவும் சிறிய பொருட்களில் ஒன்றாகிய ஊசியின் துவாரத்தின் வழியே நுழையும் வரை அவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். இது எவ்வாறு சாத்தியமற்றதோ அது போல் அவர்கள் சுவனம் நுழைவதும் சாத்தியமற்றதே. இவ்வாறே பெரும் பாவிகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.
7:41Страница 155
لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٞ وَمِن فَوۡقِهِمۡ غَوَاشٖۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ٤١
Их ложа будут из Геенны, а над ними будут покрывала. Так Мы воздаем беззаконникам.
கர்வம் கொண்ட இந்த நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் படுக்கை விரிப்புகள் உண்டு. அவர்களுக்கு மேலே நெருப்பிலான போர்வைகள் போர்த்தப்பட்டிருக்கும். அல்லாஹ்வை நிராகரித்து புறக்கணித்து அவனது வரம்புகளை மீறியவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகிறோம்.
7:42Страница 155
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٤٢
Те, которые уверовали и совершали праведные деяния, будут обитателями Рая и пребудут там вечно. Мы не возлагаем на человека сверх его возможностей.
தங்களின் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு தங்களால் இயன்ற அளவு - அல்லாஹ் ஒருவர் மீது செய்ய முடிந்த அளவுக்கே பொறுப்பு சாட்டுகிறான் - நற்செயல் புரிந்தவர்கள்தாம் சொர்க்க வாசிகளாவர். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
7:43Страница 155
وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلّٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُۖ وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهۡتَدِيَ لَوۡلَآ أَنۡ هَدَىٰنَا ٱللَّهُۖ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّۖ وَنُودُوٓاْ أَن تِلۡكُمُ ٱلۡجَنَّةُ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٤٣
Мы исторгнем из их сердец злобу, и под ними будут протекать реки. Они скажут: «Хвала Аллаху, Который привел нас к этому! Мы не последовали бы прямым путем, если бы Аллах не наставил нас. И посланники Господа нашего принесли истину». Им будет возвещено: «Вот Рай, который вы унаследовали за то, что совершали».
சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பரிபூரணமான அருட்கொடைகளில் ஒன்று, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் இருக்கும் பகைமையையும் குரோதத்தையும் நீக்கிவிடுவதும், அவர்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்வதுமாகும். அல்லாஹ் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை ஒத்துக் கொண்டவர்களாக அவர்கள் கூறுவார்கள்: “இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தந்த நற்செயலைப் புரிவதற்கு பாக்கியம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களுக்குப் பாக்கியம் அளிக்கவில்லையென்றால் நாங்களாகவே இதனைப் பெற்றிருக்க முடியாது. எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தையும் வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் உண்மையையே எங்களிடம் கொண்டு வந்தார்கள்.” அப்பொழுது ஒரு அழைப்பாளர் அவர்களை நோக்கி கூறுவார்: “இதுதான் உலகில் எனது தூதர்கள் உங்களுக்குக் கூறிய சுவர்க்கமாகும். தனது திருப்பொருத்தத்தை நாடி நீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாக உங்களுக்கு அவன் அதனை வழங்கியுள்ளான்”.
7:44Страница 156
وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ أَصۡحَٰبَ ٱلنَّارِ أَن قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقّٗا فَهَلۡ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمۡ حَقّٗاۖ قَالُواْ نَعَمۡۚ فَأَذَّنَ مُؤَذِّنُۢ بَيۡنَهُمۡ أَن لَّعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ ٤٤
Обитатели Рая воззовут к обитателям Огня: «Мы уже убедились в том, что обещанное нам нашим Господом - истина. Убедились ли вы в том, что обещанное вашим Господом - истина?». Они скажут: «Да». Тогда глашатай возвестит среди них: «Да пребудет проклятие Аллаха над беззаконниками,
சுவனவாசிகள், நரகவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தயார் செய்யப்பட்டுள்ள இடத்தில் நுழைந்த பிறகு சுவனவாசிகள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த சுவனத்தை நாங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டோம். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நிராகரிப்பாளர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த நரகத்தை நீங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டீர்களா?” அதற்கு நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த நரகத்தை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம்.” அப்பொழுது ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்வார்: “அல்லாஹ் அநியாயக்காரர்களை தன் அருளை விட்டும் தூரமாக்குவானாக. உலக வாழ்வில் அல்லாஹ் தன் அருள் வாயில்களை அவர்களுக்காகத் திறந்து வைத்திருந்தான். ஆயினும் அவர்களை அவற்றை விட்டும் முகந்திருப்பிக் கொண்டார்கள்.
7:45Страница 156
ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ كَٰفِرُونَ ٤٥
которые сбивали других с пути Аллаха, пытались исказить его и не верили в Последнюю жизнь».
இந்த அநியாயக்காரர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சத்தியப் பாதை யாரும் செல்ல முடியாதவாறு கோணலாகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்கள் மறுமை நாளை நிராகரித்தோர், அதற்கான தயாரிப்பில் ஈடுபடாதோர்.
7:46Страница 156
وَبَيۡنَهُمَا حِجَابٞۚ وَعَلَى ٱلۡأَعۡرَافِ رِجَالٞ يَعۡرِفُونَ كُلَّۢا بِسِيمَىٰهُمۡۚ وَنَادَوۡاْ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيۡكُمۡۚ لَمۡ يَدۡخُلُوهَا وَهُمۡ يَطۡمَعُونَ ٤٦
Между ними будет изгородь, а на оградах будут люди, которые распознают каждого из них по их признакам. Они воззовут к обитателям Рая: «Мир вам!». Они пока не войдут в Рай, хотя будут желать этого.
சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற இந்த இரு பிரிவினருக்குமிடையே அஃராஃப் என்று அழைக்கப்படும் உயரமான ஒரு தடுப்பு உண்டு. அதன் மீது நற்செயல்களும் தீயசெயல்களும் சமமான சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் சுவனவாசிகளை அவர்களின் பொலிவான முக அடையாளங்களைக் கொண்டும், நரகவாசிகளை அவர்களின் கருமையான முக அடையாளங்களைக் கொண்டும் அறிந்துகெள்வார்கள். இவர்கள் சுவனவாசிகளை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம், ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் அஃராபில் உள்ள அவர்கள் இன்னும் சுவனத்தில் நுழையவேயில்லை. அல்லாஹ்வின் அருளினால் அதில் நுழைவதை எதிர்பார்த்த வண்ணமே இருப்பார்கள்.
7:47Страница 156
۞ وَإِذَا صُرِفَتۡ أَبۡصَٰرُهُمۡ تِلۡقَآءَ أَصۡحَٰبِ ٱلنَّارِ قَالُواْ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٤٧
Когда же их взоры обратятся к обитателям Огня, они скажут: «Господь наш! Не помещай нас с людьми несправедливыми!».
அஃராப்வாசிகளின் பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனையைப் பார்த்து, “எங்கள் இறைவா! நிராகரித்து, இணைவைத்த இந்த அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தனை செய்வார்கள்.
7:48Страница 156
وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡأَعۡرَافِ رِجَالٗا يَعۡرِفُونَهُم بِسِيمَىٰهُمۡ قَالُواْ مَآ أَغۡنَىٰ عَنكُمۡ جَمۡعُكُمۡ وَمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ ٤٨
Люди на оградах обратятся к мужчинам, которых они узнают по их признакам, и скажут: «Не помогло вам то, что вы собирали, и ваше высокомерие.
அஃராப்வாசிகள் நரகவாசிகளான சில நிராகரிப்பாளர்களை இருள் படிந்த அவர்களின் முக அடையாளங்களைக் கொண்டும் நீலம் பூத்த அவர்களின் கண்களைக் கொண்டும் அறிந்து கூறுவார்கள்: “நீங்கள் சேகரித்து வைத்த அதிகமான சொத்துக்களும் ஆட்களும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை. கர்வம் கொண்டு சத்தியத்தை நீங்கள் புறக்கணித்ததும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை.”
7:49Страница 156
أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمۡتُمۡ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحۡمَةٍۚ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ لَا خَوۡفٌ عَلَيۡكُمۡ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ ٤٩
Разве это не те, о которых вы клялись, что Аллах никогда не проявит к ним милости?». Им будет сказано: «Войдите в Рай! Вы не познаете страха и не будете опечалены».
நிராகரிப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் கூறுவான்: “இவர்களைக் குறித்துதானே ‘அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரியவே மாட்டான்’ என்று சத்தியம் செய்து கூறினீர்கள்.” நம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் கூறுவான்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடுங்கள். எதிர்காலத்தை எண்ணி உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உங்களுக்குக் கிடைக்கும் நிரந்தமான இன்பத்தினால் உங்களுக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காக நீங்கள் கவலையடையவும் மாட்டீர்கள்.”
7:50Страница 156
وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَنۡ أَفِيضُواْ عَلَيۡنَا مِنَ ٱلۡمَآءِ أَوۡ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُۚ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلۡكَٰفِرِينَ ٥٠
Обитатели Огня воззовут к обитателям Рая: «Пролейте на нас воду или то, чем вас наделил Аллах». Они скажут: «Аллах запретил это для неверующих,
நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் கோரிக்கை வைத்தவர்களாகக் கூறுவார்கள்: “சொர்க்கவாசிகளே! எங்கள் மீது நீரை அள்ளி ஊற்றுங்கள். அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து எங்களுக்கும் வழங்குங்கள்.” சொர்க்கவாசிகள் கூறுவார்கள்: “நிராகரிப்பாளர்கள் நிராகரித்த காரணத்தால் அவையிரண்டையும் அவர்கள் மீது அல்லாஹ் தடைசெய்துள்ளான். அவன் உங்கள் மீது தடைசெய்தவற்றின் மூலம் நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவமாட்டோம்.
7:51Страница 156
ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَهۡوٗا وَلَعِبٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ نَنسَىٰهُمۡ كَمَا نَسُواْ لِقَآءَ يَوۡمِهِمۡ هَٰذَا وَمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ ٥١
которые обратили свою религию в потеху и игру и обольстились мирской жизнью». Сегодня Мы предадим их забвению, подобно тому, как они предали забвению встречу в этот день и отвергли Наши знамения.
இந்த நிராகரிப்பாளர்கள்தாம் தங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் ஆக்கினார்கள். உலக வாழ்வின் அலங்காரங்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் மறுமை நாளின் சந்திப்பை மறந்து அதற்காக செயல்படாமலும் தயாராகாமலும் இருந்ததைப் போலவும், அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் உண்மையென அறிந்துகொண்டே அவற்றை நிராகரித்ததைப் போலவும் அல்லாஹ்வும் மறுமை நாளில் அவர்களை மறந்து, வேதனையில் சூழலுமாறு அவர்களை விட்டுவிடுவான்.
7:52Страница 157
وَلَقَدۡ جِئۡنَٰهُم بِكِتَٰبٖ فَصَّلۡنَٰهُ عَلَىٰ عِلۡمٍ هُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٥٢
Мы преподнесли им Писание, которое разъяснили на основании знания, как верное руководство и милость для верующих людей.
முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனை நாம் அவர்களிடம் கொண்டுவந்தோம். நம் புறத்திலுள்ள அறிவைக் கொண்டு நாம் அதனைத் தெளிவுபடுத்திவிட்டோம். இது நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியைக் காட்டக்கூடியதாகும். மேலும் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளுக்கான வழிகாட்டல் இதில் உள்ளடங்கியுள்ளதால் முஃமின்களுக்கு அது அருளும் ஆகும்.
7:53Страница 157
هَلۡ يَنظُرُونَ إِلَّا تَأۡوِيلَهُۥۚ يَوۡمَ يَأۡتِي تَأۡوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبۡلُ قَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشۡفَعُواْ لَنَآ أَوۡ نُرَدُّ فَنَعۡمَلَ غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ قَدۡ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ ٥٣
Неужели они дожидаются чего-либо, кроме исполнения пророчества? В тот день, когда оно исполнится, те, которые предали его забвению прежде, скажут: «Посланники нашего Господа принесли истину. Найдутся ли для нас заступники, которые заступились бы за нас? И не вернут ли нас обратно, чтобы мы совершили не то, что совершили прежде?». Они потеряют самих себя, и покинет их (или исчезнет) то, что они измышляли.
இந்த நிராகரிப்பாளர்கள் அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட வேதனை மிக்க தண்டனை கிடைப்பதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட வேதனையும் நம்பிக்கையாளர்களுக்குக் கூறப்பட்டிருந்த நற்கூலியும் வரும் நாளில் இவ்வுலகில் குர்ஆனை மறந்து அதன்படி செயல்படாதவர்கள் கூறுவார்கள்: “எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு எங்களிடம் வந்தார்கள். அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தோ! வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்துரை செய்பவர்கள் இருக்க வேண்டுமே! அந்தோ! நாம் மீண்டும் உலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு நாம் செய்த தீய செயல்களுக்குப் பகரமாக தப்பிக்கொள்வதற்கான நற்செயல்களில் ஈடுபட வேண்டுமே!.” இந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் நிராகரிப்பினால் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்திக் கொண்டார்கள். அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும். அவை அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
7:54Страница 157
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَ يَطۡلُبُهُۥ حَثِيثٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتِۭ بِأَمۡرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٥٤
Воистину, ваш Господь - Аллах, Который сотворил небеса и землю за шесть дней, а затем вознесся на Трон (или утвердился на Троне). Он покрывает ночью день, который поспешно за ней следует. Солнце, луна и звезды - все они покорны Его воле. Несомненно, Он творит и повелевает. Благословен Аллах, Господь миров!
மனிதர்களே! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி ஆறுநாட்களில் படைத்தவனே உங்கள் இறைவனாவான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். நம்மால் அது எவ்வாறு என்பதை உணர்ந்து கொள்ள முடியாது அவன் இரவின் இருளை பகலின் வெளிச்சத்தைக் கொண்டும் பகலின் வெளிச்சத்தை இரவின் இருளைக் கொண்டும் போக்குகிறான். அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதை வேகமாக தாமதமின்றி பின்தொடர்கிறது. இது சென்றுவிட்டால் அது நுழைந்து விடும். அவன் சூரியனையும் சந்திரனையும் படைத்துள்ளான். வசப்படுத்தப்பட்டுள்ள நட்சத்திரங்களையும் படைத்துள்ளான். அறிந்து கொள்ளுங்கள், படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைத் தவிர வேறு படைப்பாளன் இருக்கிறானா? அதிகாரம் அனைத்தும் அவனிடமே உள்ளது. அவன் நலவும் உபகாரமும் மகத்தானதும் அதிகமானதுமாகும். கண்ணியம், பரிபூரணம் ஆகிய பண்புகளை உடைய அவன் உலகிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனாவான்.
7:55Страница 157
ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعٗا وَخُفۡيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ٥٥
Взывайте к Господу своему со смирением и в тайне. Воистину, Он не любит преступников.
நம்பிக்கையாளர்களே! உங்கள் இறைவனை பூரண பணிவோடும், இரகசியமாகவும் முகஸ்துதி இல்லாமலும் பிரார்த்தனையில் மற்றவர்களை அவனுக்கு இணையாக்காமலும் உளத்தூய்மையோடு அழையுங்கள். நிச்சயமாக, பிரார்த்தனையில் தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை. இணைவைப்பாளர்களைப் போல், அல்லாஹ்வுடன் மற்றவர்களிடமும் பிரார்த்தனை செய்வது பாரதூரமான வரம்பு மீறல்களிலுள்ளதாகும்.
7:56Страница 157
وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَا وَٱدۡعُوهُ خَوۡفٗا وَطَمَعًاۚ إِنَّ رَحۡمَتَ ٱللَّهِ قَرِيبٞ مِّنَ ٱلۡمُحۡسِنِينَ ٥٦
Не распространяйте нечестия на земле после того, как она приведена в порядок. Взывайте к Нему со страхом и надеждой. Воистину, милость Аллаха близка к творящим добро.
தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்தி அவனை மாத்திரம் வழிபடுவதன் மூலம் செழிப்பாக்கிய பிறகு பாவங்கள் புரிந்து அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சியவர்களாக, அவனுடைய நன்மையில் ஆசைகொண்டவர்களாக அவனையே அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு நெருக்கமாகவே இருக்கின்றது. எனவே நன்மை செய்பவர்களில் ஆகிவிடுங்கள்.
7:57Страница 157
وَهُوَ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتۡ سَحَابٗا ثِقَالٗا سُقۡنَٰهُ لِبَلَدٖ مَّيِّتٖ فَأَنزَلۡنَا بِهِ ٱلۡمَآءَ فَأَخۡرَجۡنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِۚ كَذَٰلِكَ نُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ٥٧
Он - Тот, Кто направляет ветры добрыми вестниками Своей милости. Когда же они приносят тяжелые облака, Мы пригоняем их к мертвой земле, проливаем воду и посредством этого взращиваем всевозможные плоды. Таким же образом Мы воскрешаем мертвых. Быть может, вы помяните назидание.
அல்லாஹ்தான் காற்றை மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவையாக அனுப்புகிறான். காற்று, நீர் நிரம்பிய கனமான மேகங்களைச் சுமந்தால் நாம் அந்த மேகத்தை பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஊருக்குக் கொண்டு சென்று அங்கு மழையைப் பொழியச் செய்கின்றோம். அந்த மழையின் மூலம் எல்லா வகையான விளைச்சல்களையும் வெளிப்படுத்துகின்றோம். விளைச்சலை வெளிப்படுத்துவது போன்றே நாம் இறந்தவர்களை அடக்கஸ்த்தலத்திலிருந்து உயிரோடு வெளிப்படுத்துகின்றோம். மனிதர்களே! அல்லாஹ்வின் ஆற்றலையும் வியக்கத்தக்க செயலையும், அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன் என்பதையும் நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டே நாம் இவ்வாறு செய்தோம்.
7:58Страница 158
وَٱلۡبَلَدُ ٱلطَّيِّبُ يَخۡرُجُ نَبَاتُهُۥ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَٱلَّذِي خَبُثَ لَا يَخۡرُجُ إِلَّا نَكِدٗاۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَشۡكُرُونَ ٥٨
На хорошей земле растения растут по воле ее Господа, а на плохой земле они растут с трудом. Так Мы разъясняем знамения для благодарных людей.
நல்ல நிலம் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்ல, முழுமையான விளைச்சலை வெளிப்படுத்தும். இவ்வாறே நம்பிக்கையாளன் அறிவுரையைச் செவியேற்கிறான். அதனைக் கொண்டு பயனடைகிறான், நற்செயல்கள் புரிகிறான். உவர்ப்புத் தன்மையுடைய சதுப்பு நிலம் மோசமானவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தாது. அதில் எவ்வித நலவுமில்லை. இவ்வாறே நிராகரிப்பாளன் அறிவுரைகளைக் கொண்டு பயனடைவதில்லை. அவை அவனுக்குப் பயனளிக்கும் நற்செயல்களையும் அவனிடத்தில் உருவாக்கமாட்டா. இங்கு அற்புதமான பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டது போன்று, உண்மையை நிரூபிப்பதற்காக அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் பல்வேறு விதங்களில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்காமல் நன்றி செலுத்தி தமது இறைவனுக்குக் கட்டுப்படும் மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றோம்.
7:59Страница 158
لَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ٥٩
Мы послали Нуха (Ноя) к его народу, и он сказал: «О мой народ! Поклоняйтесь Аллаху, ибо нет у вас другого божества, кроме Него. Я боюсь, что вас постигнут мучения в Великий день».
நாம் நூஹை அவருடைய சமூகத்தின்பால் அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்பதன் பக்கம் அவர்களை அழைத்தார். அவர் கூறினார்: “என் சமூகமே அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீங்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனையை நான் அஞ்சுகிறேன்.”
7:60Страница 158
قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٦٠
Знатные люди из его народа сказали: «Мы видим, что ты находишься в очевидном заблуждении».
அவரது சமூகத்தின் தலைவர்களும் பெரியவர்களும் அவரிடம் கூறினார்கள்: “நூஹே! நாங்கள் உம்மை சத்தியத்தை விட்டும் தெளிவான தூரத்திலே காண்கிறோம்.”
7:61Страница 158
قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي ضَلَٰلَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٦١
Он сказал: «О мой народ! Я не заблуждаюсь. Напротив, я - посланник Господа миров.
அவர் தம் சமூகத்தின் தலைவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவதுபோல நான் வழிகெட்டவன் அல்ல. நான் என் இறைவன் காட்டிய நேரான வழியில் இருக்கின்றேன். என் இறைவனும் உங்கள் இறைவனும் அகிலுத்திலுள்ள அனைத்திற்கும் இறைவனுமான அல்லாஹ்விடமிருந்து உங்களின்பால் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
7:62Страница 158
أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنصَحُ لَكُمۡ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٦٢
Я сообщаю вам послания моего Господа и даю вам искренние советы. Я узнаю от Аллаха то, чего вы не знаете.
அல்லாஹ் எனக்குக் கொடுத்து அனுப்பிய இறைச்செய்தியை உங்களிடம் எடுத்துரைக்கிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்கும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளிலும் உங்களுக்கு ஆர்வமூட்டுவதன் மூலமும், அவன் தடுத்துள்ளவற்றில் ஈடுபடுவதையும் அதற்குக் கிடைக்கும் தண்டனைகளைக் கொண்டு அச்சமூட்டுவதன் மூலமும் உங்களுக்கு நலவையே நான் நாடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாததை அவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் நான் அறிவேன்.
7:63Страница 158
أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡ وَلِتَتَّقُواْ وَلَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ٦٣
Неужели вы удивляетесь тому, что напоминание от вашего Господа явилось к вам через мужчину из вашей среды, чтобы он мог предостеречь вас и чтобы вы стали богобоязненны? Быть может, тогда вы будете помилованы».
உங்களுக்கு அறிமுகமான உங்களிலுள்ள ஒரு மனிதர் வாயிலாக உங்கள் இறைவனிடமிருந்து வஹியும் அறிவுரையும் வந்துள்ளன என்பதற்காகவா ஆச்சரியப்படுகிறீர்கள்? அவர் உங்களிடையே வளர்ந்தவர்தாம். பொய்யரோ வழிகெட்டவரோ வேறொரு இனத்தைச் சேர்ந்தவரோ அல்ல. நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனுடைய தண்டனையைக் கொண்டு உங்களை அச்சமூட்டவும் நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டால் உங்கள் மீது கருணை காட்டப்படலாம் என்பதற்காகவும் அவர் உங்களிடம் வந்துள்ளார்.
7:64Страница 158
فَكَذَّبُوهُ فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمًا عَمِينَ ٦٤
Они сочли его лжецом, а Мы спасли его и тех, кто был с ним, в ковчеге, и потопили тех, кто счел ложью Наши знамения. Воистину, они были слепыми людьми.
அவரது சமூகத்தினர் அவர் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவரை நிராகரித்தனர். மாறாக தங்களின் நிராகரிப்பிலேயே நிலைத்திருந்தார்கள். அவர்களை அழித்து விடும்படி அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். நாம் அவரையும் அவருடன் கப்பலில் ஏறிய நம்பிக்கையாளர்களையும் மூழ்காது காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்து அதில் நிலைத்திருந்தவர்களை, தண்டிப்பதற்காக இறக்கப்பட்ட வெள்ளத்தினால் மூழ்கடித்து அழித்து விட்டோம். நிச்சயமாக அவர்களின் உள்ளங்கள் சத்தியத்தை விட்டும் குருடாகவே இருந்தன.
7:65Страница 158
۞ وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ٦٥
Мы отправили к адитам их брата Худа. Он сказал: «О мой народ! Поклоняйтесь Аллаху, ибо нет у вас другого божества, кроме Него. Неужели вы не устрашитесь?».
ஆத் சமூகத்தாரிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினோம். அவர் ஹுத் (அலை) ஆவார். அவர் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சமாட்டீர்களா?
7:66Страница 158
قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ٦٦
Знатные люди из его народа, которые не уверовали, сказали: «Мы видим, что ты глупец, и считаем тебя одним из лжецов».
அவரது சமூகத்தில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த தலைவர்களும் பெரியவர்களும் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி சிலைகளை விட்டு விட வேண்டும் என்று நீர் எங்களை அழைத்த போது நீர் புத்திக் கோளாறு, மடமையிலுமே இருக்கின்றீர் என்பதை நாங்கள் நன்கு அறிந்து கொண்டோம். நீர் தூதர் என்ற வாதத்தில் நீர் பொய்யர் என்பதாகவே நாம் கருதுகின்றோம்.”
7:67Страница 158
قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي سَفَاهَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٦٧
Он сказал: «О мой народ! Я не являюсь глупцом, а являюсь посланником Господа миров.
ஹூத் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்: “என் சமூகமே! எனக்கு புத்தி கோளாறோ, மடமையோ இல்லை. மாறாக நிச்சயமாக அகிலமனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.”
7:68Страница 159
أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنَا۠ لَكُمۡ نَاصِحٌ أَمِينٌ ٦٨
Я доношу до вас послания от вашего Господа, и я для вас - надежный и добрый советчик.
அல்லாஹ் எனக்கு உங்களிடம் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்ட ஏகத்துவத்தையும் சட்டதிட்டங்களையுமே நான் எடுத்துரைக்கிறேன். நான் உங்கள் எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டவற்றில் உங்களுக்கு விசுவாசம்மிக்கவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии