Аль-МухтасарАль‑Муддассир · 74:1–56

Аль-Мухтасар · Тафсир · на тамильском

المدثر

Аль-Муддассир

Завернувшийся · Мекканская · 56 аятов

74:1Страница 575

يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ ١

О завернувшийся!

தம் ஆடையால் போர்த்திக் கொண்டவரே! (அவர் நபி (ஸல்) அவர்களாவர்)

74:2Страница 575

قُمۡ فَأَنذِرۡ ٢

Встань и увещевай!

எழுந்து அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்வீராக.

74:3Страница 575

وَرَبَّكَ فَكَبِّرۡ ٣

Господа своего величай!

உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக.

74:4Страница 575

وَثِيَابَكَ فَطَهِّرۡ ٤

Одежды свои очищай!

உம் ஆடையை அழுக்குகளை விட்டும் உம்மைப் பாவத்தை விட்டும் தூய்மையாக வைத்துக் கொள்வீராக.

74:5Страница 575

وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ ٥

Скверны (идолов) сторонись!

சிலைவணக்கத்தை விட்டுவிடுவீராக.

74:6Страница 575

وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ ٦

Не оказывай милости, чтобы получить большее!

உங்களின் நற்காரியங்களை அதிகமாகக் கருதி உமது இறைவனிடம் அதனைக் கூறிக்காட்டாதீர்.

74:7Страница 575

وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ٧

Ради Господа твоего будь терпелив!

நீர் சந்திக்கும் துன்பங்களை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்வீராக.

74:8Страница 575

فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ ٨

Когда же протрубят в рог,

இரண்டாவது முறை சூர் ஊதப்படும்போது

74:9Страница 575

فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ ٩

то день тот будет Днем тяжким,

அந்த நாள் மிகவும் கடினமான நாளாக இருக்கும்.

74:10Страница 575

عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ ١٠

нелегким для неверующих.

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு அது இலகுவானதல்ல.

74:11Страница 575

ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا ١١

Оставь Меня с тем, кого Я сотворил одиноким,

தூதரே!- எவ்வித சொத்தோ, பிள்ளைச் செல்வமோ இன்றி தாயினுடைய வயிற்றில் தனியாக நான் யாரைப் படைத்தேனோ அவனையும் என்னையும் விட்டுவிடுவீராக. (இது வலீத் இப்னு முகீராவைக் குறிக்கும்)

74:12Страница 575

وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا ١٢

даровал ему большое богатство

அவனுக்கு நான் ஏராளமான செல்வங்களை அளித்தேன்.

74:13Страница 575

وَبَنِينَ شُهُودٗا ١٣

и сыновей, которые находились рядом с ним,

அதிகமான சொத்தின் காரணமாக பிரயாணத்துக்காகவேனும் அவனைப் பிரியாத விழாக்களிலும் அவனுடனேயே கலந்துகொண்டு அவனுடனே இருக்கக்கூடிய மகன்களையும் நான் அவனுக்கு வழங்கினேன்.

74:14Страница 575

وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا ١٤

и распростер перед ним этот мир полностью.

வாழ்விலும், வாழ்வாதாரத்திலும், பிள்ளைச் செல்வத்திலும் அவனுக்கு தாராளமாக நான் வழங்கினேன்.

74:15Страница 575

ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ١٥

После всего этого он желает, чтобы Я добавил ему.

பின்னர் அவை அனைத்தையும் அவனுக்கு நான் வழங்கிய பின்பும் அவன் என்னை நிராகரித்துக் கொண்டே நான் அவனுக்கு இன்னும் அதிகம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

74:16Страница 575

كـَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا ١٦

Но нет! Он упрямо отрицает Наши знамения.

அவன் எண்ணுவது போலல்ல. நிச்சயமாக அவன் நம் தூதர்மீது இறக்கப்பட்ட வசனங்களை நிராகரிப்பவனாக இருந்தான்.

74:17Страница 575

سَأُرۡهِقُهُۥ صَعُودًا ١٧

Я возложу на него подъем (восхождение на гору в Аду).

நாம் அவனால் தாங்க முடியாத கடும் வேதனைக்கு அவனை உட்படுத்துவோம்.

74:18Страница 576

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ١٨

Он подумал и рассчитал.

நான் அந்த அருட்கொடைகளை வழங்கிய இந்த நிராகரிப்பாளன் குர்ஆனை மறுப்பதற்கு என்ன கூறலாம் என்று சிந்தித்தான். அதுகுறித்து தன் மனதில் திட்டமிட்டான்.

74:19Страница 576

فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ ١٩

Да сгинет он! Как он рассчитал?!

அவன் சபிக்கப்பட்டு, வேதனைக்குள்ளாக்கப்பட்டான். எவ்வாறு அவன் திட்டமிட்டான்!

74:20Страница 576

ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ٢٠

Да сгинет он еще раз! Как он рассчитал?!

பின்னரும் அவன் சபிக்கப்பட்டு, வேதனைக்குள்ளாக்கப்பட்டான். எவ்வாறு அவன் திட்டமிட்டான்!

74:21Страница 576

ثُمَّ نَظَرَ ٢١

Затем он задумался.

பின்னர் மீண்டும் அவன் தான் கூறுவது குறித்து சிந்தித்தான்.

74:22Страница 576

ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢

Затем он нахмурился и насупился.

பின்னர் குர்ஆனைக் குறித்து குறைகூற எதுவும் பெறாததால் அவன் கடுகடுத்து முகம் சுளித்தான்.

74:23Страница 576

ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ٢٣

Затем он повернулся спиной и возгордился

பின்னர் நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தான். நபியை பின்பற்றாமல் கர்வம் கொண்டான்.

74:24Страница 576

فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ ٢٤

и сказал: «Это - не что иное, как пересказанное колдовство.

அவன் கூறினான்: “முஹம்மது கொண்டுவந்தது அல்லாஹ்வின் வாக்கல்ல. மாறாக மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கூறும் சூனியமாகும்.

74:25Страница 576

إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ ٢٥

Это - не что иное, как слова человека».

இது அல்லாஹ்வின் வார்த்தையல்ல. மாறாக மனிதனின் வார்த்தையாகும்.”

74:26Страница 576

سَأُصۡلِيهِ سَقَرَ ٢٦

Я брошу его в Преисподнюю.

விரைவில் இந்த நிராகரிப்பாளனை நான் ‘ஸகர்’ என்னும் நரகத்தில் புகுத்துவேன். அதன் வெப்பத்தை அவன் உணர்வான்.

74:27Страница 576

وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ٢٧

Откуда ты мог знать, что такое Преисподняя?

முஹம்மதே!- ‘ஸகர்’ என்றால் என்னவென்று உமக்குத் அறிவித்தது எது?

74:28Страница 576

لَا تُبۡقِي وَلَا تَذَرُ ٢٨

Она не щадит и не оставляет.

அதில் வேதனை செய்யப்படுபவரில் எதையும் விட்டுவைக்காது. பின்னர் அவன் பழைய நிலைக்குத் திரும்புவான். பின்பும் அது அவனை விடாது. இவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும்.

74:29Страница 576

لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ ٢٩

Она сжигает кожу.

அது தோல்களை முற்றிலும் எரித்து மாற்றிவிடும்.

74:30Страница 576

عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ ٣٠

Их (ангелов) над ней - девятнадцать.

அதன்மீது பத்தொன்பது வானவர்கள் இருப்பார்கள். அவர்கள் அதன் காவலாளிகளாவர்.

74:31Страница 576

وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ٣١

Стражами Огня мы сделали только ангелов, а количество их сделали искушением для неверующих, чтобы удостоверились те, кому было даровано Писание, чтобы усилилась вера у верующих, чтобы не сомневались те, кому было даровано Писание, и верующие, и чтобы спросили те, чьи сердца поражены недугом, и неверующие: «Что хотел Аллах этой притчей?». Так Аллах вводит в заблуждение, кого пожелает, и ведет прямым путем, кого пожелает. Воинство твоего Господа не знает никто, кроме Него. Это же - не что иное, как Напоминание для человечества.

நாம் வானவர்களையே நரகத்தின் காவலாளிகளாக ஆக்கியுள்ளோம். மனிதர்களுக்கு அவர்களை எதிர்க்கும் சக்தி கிடையாது. நாம் அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அவர்களின் இந்த எண்ணிக்கையை சோதனையாகவே ஆக்கியுள்ளோம். இது அவர்கள் கூறுவதை கூற வேண்டும். இதனால் அவர்களின் வேதனை பலமடங்கு அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் குர்ஆன் அவர்களின் வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக இறங்கியது என்பதை உறுதியாக அறிந்துகொள்வதற்காகவும், வேதக்காரர்கள் தம்முடன் உடன்படும் போது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பதற்காவும், யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காவும், நம்பிக்கையில் தடுமாற்றம் உள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் “இந்த விசித்திரமான எண்ணிக்கையின் மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகின்றான்?” என்று கூறுவதற்காகவும்தான். இவ்வாறு இந்த எண்ணிக்கையை நிராகரித்தவனை அல்லாஹ் வழிகெடுத்து அதனை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியளித்தது போன்று அல்லாஹ் யாரை வழிகெடுக்க நாடுகிறானோ அவரை வழிகெடுக்கிறான், யாருக்கு வழிகாட்ட நாடுகிறானோ அவருக்கு வழிகாட்டுகிறான். உம் இறைவனின் பெரும் படைகளை அவன் மட்டுமே அறிவான். நரகம் மனிதர்களுக்கான நினைவூட்டலேயாகும். அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் மகத்துவத்தை அறிந்துகொள்வார்கள்.

74:32Страница 576

كـَلَّا وَٱلۡقَمَرِ ٣٢

О да! Клянусь луной!

இணைவைப்பாளர்களில் சிலர் எண்ணுவதுபோல நரகத்தின் காவலாளிகளை அவரின் சகாக்கள் வீழ்த்திவிட முடியாது. அல்லாஹ் சந்திரனைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

74:33Страница 576

وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ ٣٣

Клянусь ночью, когда она отступает!

பின்னோக்கிச் செல்லும் இரவைக்கொண்டு சத்தியம் செய்கின்றான்.

74:34Страница 576

وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ ٣٤

Клянусь зарей, когда она занимается!

பிரகாசமான அதிகாலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

74:35Страница 576

إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ٣٥

Это есть одно из величайших явлений,

நிச்சயமாக நரக நெருப்பு மிகப் பெரும் சோதனைகளில் ஒன்றாகும்.

74:36Страница 576

نَذِيرٗا لِّلۡبَشَرِ ٣٦

предостерегающее человечество -

அது மனிதர்களை அச்சுறுத்துவதாக உள்ளது.

74:37Страница 576

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ ٣٧

тех из вас, кто желает продвигаться вперед благодаря праведным деяниям или отступать назад, совершая грехи.

மனிதர்களே!- உங்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து முன்னோக்கிச் செல்ல விரும்புபவர்கள் முன்னோக்கிச் செல்லட்டும் அல்லது நிராகரித்து, பாவங்கள் புரிந்து பின்னோக்கிச் செல்லட்டும்.

74:38Страница 576

كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ ٣٨

Каждый человек является заложником того, что он приобрел,

ஒவ்வொருவரும் தாம் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக உள்ளார்கள். ஒன்று அவர்களின் செயல்கள் அவர்களை அழிவில் ஆழ்த்திவிடலாம் அல்லது அவை அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாம்.

74:39Страница 576

إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ ٣٩

кроме людей правой стороны.

ஆயினும் நம்பிக்கையாளர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களின் பாவங்களின் காரணமாக குற்றம்பிடிக்கப்பட மாட்டார்கள். மாறாக அவர்கள் செய்த நற்செயல்களின் காரணமாக அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்துவிடுவான்.

74:40Страница 576

فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ ٤٠

В Райских садах они будут расспрашивать друг друга

அவர்கள் மறுமை நாளில் சுவனங்களில் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

74:41Страница 576

عَنِ ٱلۡمُجۡرِمِينَ ٤١

о грешниках.

பாவங்கள் புரிந்து தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்திக்கொண்ட நிராகரிப்பாளர்களைக் குறித்து.

74:42Страница 576

مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ٤٢

Что привело вас в Преисподнюю?

அவர்கள் அவர்களிடத்தில் கேட்பார்கள்: “எது உங்களை நரகில் பிரவேசிக்கச் செய்தது?”

74:43Страница 576

قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ٤٣

Они скажут: «Мы не были в числе тех, которые совершали намаз.

அதற்கு நிராகரிப்பாளர்கள் விடையளித்தவர்களாக கூறுவார்கள்: “நாங்கள் உலக வாழ்க்கையில் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கவில்லை.

74:44Страница 576

وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ٤٤

Мы не кормили бедняков.

அல்லாஹ் எங்களுக்கு வழங்கியவைகளில் நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை.

74:45Страница 576

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ ٤٥

Мы погружались в словоблудие вместе с погружавшимися.

நாங்கள் அசத்தியவாதிகளுடன் அவர்கள் எங்கு சென்றாலும் நாங்களும் அவர்களுடன் சென்று சுற்றிக்கொண்டிருந்தோம். வழிகேடர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

74:46Страница 576

وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ ٤٦

Мы считали ложью Последний день,

கூலி கொடுக்கப்படும் நாளை நாங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்தோம்.

74:47Страница 576

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ ٤٧

пока к нам не явилась убежденность (смерть)».

எங்களுக்கு மரணம் நேரும்வரை நாங்கள் நிராகரிப்பில் உழன்று கொண்டிருந்தோம். மரணம் எங்களுக்கும் திருந்துவதற்கும் இடையில் தடுப்பாக அமைந்துவிட்டது.

74:48Страница 577

فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ ٤٨

Заступничество заступников не поможет им.

மறுமை நாளில் பரிந்துரை செய்யக்கூடிய வானவர்கள், நபிமார்கள், நல்லடியார்கள் ஆகிய எவரின் பரிந்துரையும் அவர்களுக்குப் பயனளிக்காது. ஏனெனில் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று, பரிந்துரை செய்யப்படுபவரைக்குறித்து இறைவன் திருப்தியடைந்திருக்க வேண்டும்.

74:49Страница 577

فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ ٤٩

Что же с ними? Почему они отворачиваются от Напоминания,

எது இந்த இணைவைப்பாளர்களை குர்ஆனை விட்டும் புறக்கணிக்கத் தூண்டியது?

74:50Страница 577

كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ ٥٠

словно напуганные ослы,

விரைவாக வெருண்டோடும் காட்டுக்கழுதையைப் போன்று அவர்கள் குர்ஆனைப் புறக்கணிப்பவர்களாக உள்ளனர்!

74:51Страница 577

فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ ٥١

бегущие от стрелка (или льва)?

அது சிங்கத்திற்குப் பயந்து வெருண்டோடுகிறது.

74:52Страница 577

بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ ٥٢

Но ведь каждый из них желает получить развернутые свитки.

மாறாக இந்த இணைவைப்பாளர்களில் ஒவ்வொருவரும் தன் தலைக்கு மேல் ஒரு விரிக்கப்பட்ட புத்தகம் இருந்து அது ‘முஹம்மது அல்லாஹ்வின் தூதர்தாம்’ என்று அவர்களிடம் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்குக் காரணம் ஆதாரங்களின் போதாமை அல்லது ஆதாரங்களின் பலவீனம் அல்ல. மாறாக அவர்களின் கர்வமும் பிடிவாதமுமேயாகும்.

74:53Страница 577

كـَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ ٥٣

Но нет! Они не боятся Последней жизни.

விடயம் அவ்வாறு அல்ல. அவர்கள் வழிகேட்டில் உழன்று கொண்டிருப்பதற்கான காரணம் அவர்கள் மறுமையின் வேதனையின்மீது நம்பிக்கைகொள்ளவில்லை என்பதுதான். அதனால்தான் அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருக்கிறார்கள்.

74:54Страница 577

كـَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ ٥٤

Но нет! Это есть Назидание.

அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இந்த குர்ஆன் அறிவுரையாகவும் நினைவூட்டலாகவும் இருக்கின்றது.

74:55Страница 577

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ٥٥

Помянет его тот, кто захочет.

எனவே எவர் குர்ஆனைப் படித்து அறிவுரை பெற விரும்புகிறாரோ அவர் குர்ஆனைப் படித்து அறிவுரை பெறட்டும்.

74:56Страница 577

وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ ٥٦

Но они не помянут его, если этого не пожелает Аллах. Он - Тот, Кто достоин страха и способен на прощение.

அவர்கள் அறிவுரை பெறவேண்டுமென அல்லாஹ் நாடியவர்கள் மாத்திரமே அறிவுரை பெறுவார்கள். ஏவல்களை எடுத்துநடந்து விலக்கல்களைத் தவிர்ந்து அஞ்சப்படுவதற்கு அவனே தகுதியானவன். தன் அடியார்கள் தன் பக்கம் திரும்பினால் அவர்களின் பாவங்களை மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English