Al-MukhtasarAl‑Anbya · 21:1–45

Al-Mukhtasar · Tafsir · in Tamil

الأنبياء

Al-Anbya

The Prophets · Meccan · 112 ayahs

21:1Page 322

ٱقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِي غَفۡلَةٖ مُّعۡرِضُونَ ١

[The time of] their account has approached for the people, while they are in heedlessness turning away.

மறுமை நாளில் தமது செயல்களுக்காக விசாரணை நடைபெறுவது மக்களை நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ உலகில் ஈடுபாடுகொண்டதனால் மறுமையைப் புறக்கணித்தவர்களாக அலட்சியத்தில் உள்ளார்கள்.

21:2Page 322

مَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّن رَّبِّهِم مُّحۡدَثٍ إِلَّا ٱسۡتَمَعُوهُ وَهُمۡ يَلۡعَبُونَ ٢

No mention [i.e., revelation] comes to them anew from their Lord except that they listen to it while they are at play

தமது இறைவனிடமிருந்து புதிதாக எந்தவொரு குர்ஆன் வசனம் வந்தாலும் அதனை அவர்கள் பயனற்ற முறையிலேயே செவியேற்கிறார்கள். மாறாக அவர்கள் விளையாட்டாகவும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்தாதவர்களாகவுமே செவியேற்கிறார்கள்.

21:3Page 322

لَاهِيَةٗ قُلُوبُهُمۡۗ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَى ٱلَّذِينَ ظَلَمُواْ هَلۡ هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡۖ أَفَتَأۡتُونَ ٱلسِّحۡرَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ ٣

With their hearts distracted. And those who do wrong conceal their private conversation, [saying], "Is this [Prophet] except a human being like you? So would you approach magic while you are aware [of it]?"

அவர்களின் உள்ளங்கள் அதனைவிட்டும் அலட்சியமாக இருக்கும் நிலையிலேயே செவியேற்கிறார்கள். நிராகரித்து அநியாயக்காரர்களான இவர்கள் தங்களிடையே இரகசியமாக, “தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர் நிச்சயமாக உங்களைப்போன்ற மனிதர்தானே. உங்களைவிட அவருக்கு எந்த சிறப்பும் இல்லையே. அவர் கொண்டுவந்தது சூனியமாகும். நிச்சயமாக அவர் உங்களைப்போன்ற மனிதர்தான், அவர் கொண்டுவந்தது சூனியம்தான் என்பதை அறிந்துகொண்டே அவரைப் பின்பற்றுகிறீர்களா?” என்று கூறிக்கொள்கிறார்கள்.

21:4Page 322

قَالَ رَبِّي يَعۡلَمُ ٱلۡقَوۡلَ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٤

He [the Prophet (ﷺ)] said, "My Lord knows whatever is said throughout the heaven and earth, and He is the Hearing, the Knowing."

நபியவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இரகசியமாகக் கூறுவதை என் இறைவன் அறிவான். வானங்களிலும் பூமியிலும் பேசக்கூடியவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அனைத்தையும் அவன் அறிவான். அவன் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

21:5Page 322

بَلۡ قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمِۭ بَلِ ٱفۡتَرَىٰهُ بَلۡ هُوَ شَاعِرٞ فَلۡيَأۡتِنَا بِـَٔايَةٖ كَمَآ أُرۡسِلَ ٱلۡأَوَّلُونَ ٥

But they say, "[The revelation is but] a mixture of false dreams; rather, he has invented it; rather, he is a poet. So let him bring us a sign just as the previous [messengers] were sent [with miracles]."

மாறாக முஹம்மது கொண்டுவந்ததைக் குறித்து அவர்கள் தடுமாற்றத்தில் இருந்தார்கள். சில சமயங்களில் கூறினார்கள்: “இவை குழப்பமான கனவுகள். இவற்றிற்கு எந்த விளக்கமும் கூறமுடியாது, என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இல்லை, இதற்கு ஒரு அடிப்படையே இல்லாமல் இதனைப் புனைந்து கூறியுள்ளார், என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இவர் ஒரு கவிஞர், என்று. அவர் தம் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் முந்தைய தூதர்கள் கொண்டு வந்ததைப்போல ஒரு அற்புதத்தைக் கொண்டு வரட்டும். முந்தைய தூதர்கள் அற்புதங்களைக் கொண்டுவந்தார்கள். உதாரணமாக மூஸாவின் கைத்தடி, ஸாலிஹின் பெண் ஒட்டகம்.

21:6Page 322

مَآ ءَامَنَتۡ قَبۡلَهُم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآۖ أَفَهُمۡ يُؤۡمِنُونَ ٦

Not a [single] city which We destroyed believed before them,1 so will they believe?

இவ்வாறு ஆலோசனை கூறும் இவர்களுக்கு முன்னால் இவர்களைப்போன்று சான்றுகள் இறக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை கூறி, அவை வழங்கப்பட்ட எந்த ஊர்வாசிகளும் நம்பிக்கைகொள்ளவில்லை. மாறாக அவர்கள் அவற்றை பொய்பித்துவிட்டார்கள் அதனால் அவர்களை நாம் அழித்தோம். இவர்கள் மட்டும் நம்பிக்கைகொள்ளவா போகிறார்கள்?

21:7Page 322

وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ٧

And We sent not before you, [O Muḥammad], except men to whom We revealed [the message], so ask the people of the message [i.e., former scriptures] if you do not know.

தூதரே!- நாம் உமக்கு முன்னர் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக அனுப்பி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். நாம் வானவர்களைத் தூதர்களாக அனுப்பவில்லை. நீங்கள் அதனை அறியாதவர்களாக இருந்தால் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

21:8Page 322

وَمَا جَعَلۡنَٰهُمۡ جَسَدٗا لَّا يَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُواْ خَٰلِدِينَ ٨

And We did not make them [i.e., the prophets] forms not eating food,1 nor were they immortal [on earth].

நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்ணாத சடலமாக ஆக்கவில்லை. மாறாக மற்றவர்களைப் போல அவர்களும் உணவு உண்டார்கள். அவர்கள் உலகில் மரணிக்காமல் நிலைத்திருப்பவர்களுமல்லர்.

21:9Page 322

ثُمَّ صَدَقۡنَٰهُمُ ٱلۡوَعۡدَ فَأَنجَيۡنَٰهُمۡ وَمَن نَّشَآءُ وَأَهۡلَكۡنَا ٱلۡمُسۡرِفِينَ ٩

Then1 We fulfilled for them the promise, and We saved them and whom We willed and destroyed the transgressors.

பின்னர் நாம் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். அவர்களையும் நாம் நாடிய நம்பிக்கைகொண்டவர்களையும் நாம் அழிவிலிருந்து காப்பாற்றி அல்லாஹ்வை நிராகரித்து பாவங்கள் புரிந்து வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.

21:10Page 322

لَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ كِتَٰبٗا فِيهِ ذِكۡرُكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ ١٠

We have certainly sent down to you a Book [i.e., the Qur’ān] in which is your mention.1 Then will you not reason?

நாம் உங்களுக்கு குர்ஆனை இறக்கியுள்ளோம். நீங்கள் அதனை உண்மைப்படுத்தி அதன்படி செயல்பட்டால் அதில் உங்களுக்கு கண்ணியமும் பெருமையும் உள்ளது. அதனை நீங்கள் புரியமாட்டீர்களா? எனவே அதனை நம்பிக்கைகொண்டு, அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதன் பால் விரையுங்கள்.

21:11Page 323

وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡيَةٖ كَانَتۡ ظَالِمَةٗ وَأَنشَأۡنَا بَعۡدَهَا قَوۡمًا ءَاخَرِينَ ١١

And how many a city which was unjust1 have We shattered and produced after it another people.

நிராகரித்து, அநீதியிழைத்ததனால் எவ்வளவோ ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களுக்குப் பின்னர் வேறொரு சமூகத்தை உருவாக்கினோம்.

21:12Page 323

فَلَمَّآ أَحَسُّواْ بَأۡسَنَآ إِذَا هُم مِّنۡهَا يَرۡكُضُونَ ١٢

And when they [i.e., its inhabitants] perceived Our punishment, at once they fled from it.

அழிக்கப்படுவோர் அடியோடு அழிக்கும் நம்முடைய வேதனையைக் கண்டபோது அழிவிலிருந்து தப்ப, தமது ஊரைவிட்டு விரைந்து ஓடினார்கள்.

21:13Page 323

لَا تَرۡكُضُواْ وَٱرۡجِعُوٓاْ إِلَىٰ مَآ أُتۡرِفۡتُمۡ فِيهِ وَمَسَٰكِنِكُمۡ لَعَلَّكُمۡ تُسۡـَٔلُونَ ١٣

[Some angels said], "Do not flee but return to where you were given luxury and to your homes - perhaps you will be questioned."1

பரிகாசமாக அவர்கள் அழைக்கப்பட்டார்கள்: “ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த உல்லாச வாழ்வின் பக்கம், உங்கள் வசிப்பிடங்களின் பக்கம் திரும்புங்கள். உங்கள் உலகிலிருந்து நீங்கள் எதையேனும் கேட்கப்படலாம்.”

21:14Page 323

قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ١٤

They said, "O woe to us! Indeed, we were wrongdoers."

இந்த அநியாயக்காரர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொண்டவர்களாகக் கூறினார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட இழப்பே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அநியாயக்காரர்களாகத்தான் இருந்தோம்.”

21:15Page 323

فَمَا زَالَت تِّلۡكَ دَعۡوَىٰهُمۡ حَتَّىٰ جَعَلۡنَٰهُمۡ حَصِيدًا خَٰمِدِينَ ١٥

And that declaration of theirs did not cease until We made them [as] a harvest [mowed down], extinguished [like a fire].

அவர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொள்வதும் தங்களுக்கு எதிராக அழிவை வேண்டுவதுமே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் பிரார்த்தனையாக இருந்தது. நாம் அவர்களை அறுவடை செய்யப்பட்ட பயிரைப்போன்று, உயிரற்ற ஜடங்களாக ஆக்கிவிடும் வரை அவ்வாறே கூறிக்கொண்டிருந்தார்கள்.

21:16Page 323

وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ ١٦

And We did not create the heaven and earth and that between them in play.

வானத்தையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. மாறாக நம்முடைய வல்லமையை அறிவிப்பதற்காகவே நாம் அவற்றைப் படைத்துள்ளோம்.

21:17Page 323

لَوۡ أَرَدۡنَآ أَن نَّتَّخِذَ لَهۡوٗا لَّٱتَّخَذۡنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ ١٧

Had We intended to take a diversion,1 We could have taken it from [what is] with Us - if [indeed] We were to do so.

நாம் மனைவியையோ மகனையோ ஏற்படுத்த நாடியிருந்தால் நம்மிடம் இருப்பவற்றிலிருந்து எடுத்திருப்போம். அதனை விட்டும் நாம் தூய்மையானவர்கள் என்பதனால் நாம் அதனைச் செய்பவர்களல்ல.

21:18Page 323

بَلۡ نَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَى ٱلۡبَٰطِلِ فَيَدۡمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٞۚ وَلَكُمُ ٱلۡوَيۡلُ مِمَّا تَصِفُونَ ١٨

Rather, We dash the truth upon falsehood, and it destroys it,1 and thereupon it departs. And for you is destruction from that which you describe.2

மாறாக நாம் நம் தூதருக்கு அறிவிக்கும் சத்தியத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் அசத்தியத்தைத் தாக்குகின்றோம். அது அசத்தியத்தை அடித்து நொறுக்கி விடுகிறது. அசத்தியம் அழிந்துவிடுகிறது. -அல்லாஹ்வுக்கு மனைவியோ மகனோ உண்டு என்று கூறக்கூடியவர்களே!- அவனுக்குத் தகுதியில்லாததைக்கொண்டு நீங்கள் வர்ணிப்பதால் உங்களுக்கு அழிவுதான் உண்டாகும்.

21:19Page 323

وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ ١٩

To Him belongs whoever is in the heavens and the earth. And those near Him [i.e., the angels] are not prevented by arrogance from His worship, nor do they tire.

வானங்களிலும் பூமியிலும் உள்ள ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனிடம் உள்ள வானவர்கள் அவனை கர்வத்தினால் வணங்காமலிருக்கவும் மாட்டார்கள். வணங்கியதால் களைப்படைந்துவிடவும் மாட்டார்கள்.

21:20Page 323

يُسَبِّحُونَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لَا يَفۡتُرُونَ ٢٠

They exalt [Him] night and day [and] do not slacken.

எப்பொழுதும் அவனைப் புகழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் சோர்வடைவதில்லை.

21:21Page 323

أَمِ ٱتَّخَذُوٓاْ ءَالِهَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ هُمۡ يُنشِرُونَ ٢١

Or have they [i.e., men] taken for themselves gods from the earth who resurrect [the dead]?

மாறாக இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவற்றால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது. அவ்வாறு செய்ய இயலாத தெய்வங்களை எவ்வாறு அவர்கள் வணங்குகிறார்கள்?!

21:22Page 323

لَوۡ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَاۚ فَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ ٢٢

Had there been within them [i.e., the heavens and earth] gods besides Allāh, they both would have been ruined. So exalted is Allāh, Lord of the Throne, above what they describe.

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அல்லாத பல தெய்வங்கள் இருந்தால் அவைகளின் ஆட்சிக்கான போராட்டத்தினால் அவ்விரண்டும் சீர்கெட்டுப் போயிருக்கும். ஆனால் நடைமுறை அதற்கு மாற்றமாகவே உள்ளது. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என இணைவைப்பாளர்கள் பொய்யாக கூறும் வர்ணனைகளை விட்டும் அர்ஷின்அதிபதியான அல்லாஹ் தூய்மையானவன்.

21:23Page 323

لَا يُسۡـَٔلُ عَمَّا يَفۡعَلُ وَهُمۡ يُسۡـَٔلُونَ ٢٣

He is not questioned about what He does, but they will be questioned.

ஆட்சியதிகாரத்திலும் விதியை நிர்ணயிப்பதிலும் அல்லாஹ் தனித்தவன். அவன் ஏற்படுத்திய விதியை, தீர்ப்பைக் குறித்து எவரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அவன் தன் அடியார்களின் செயல்களைக்குறித்து கேள்வி கேட்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

21:24Page 323

أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡۖ هَٰذَا ذِكۡرُ مَن مَّعِيَ وَذِكۡرُ مَن قَبۡلِيۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٱلۡحَقَّۖ فَهُم مُّعۡرِضُونَ ٢٤

Or have they taken gods besides Him? Say, [O Muḥammad], "Produce your proof. This [Qur’ān] is the message for those with me and the message of those before me."1 But most of them do not know the truth, so they are turning away.

மாறாக அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அவை வணக்கத்திற்கு தகுதியானவை என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். என்மீது இறக்கப்பட்ட இந்த வேதத்திலும் முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக பெரும்பான்மையான இணைவைப்பாளர்கள் அறியாமையையும், குருட்டுத்தனமாக பின்பற்றுவதையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் புறக்கணிக்கிறார்கள்.

21:25Page 324

وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ ٢٥

And We sent not before you any messenger except We revealed to him that, "There is no deity except Me, so worship Me."

தூதரே!- உமக்கு முன்னால் அனுப்பிய தூதர்கள் அனைவருக்கும், “நிச்சயமாக என்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. எனவே என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள்” என்றுதான் வஹி அறிவித்தோம்.

21:26Page 324

وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ ٢٦

And they say, "The Most Merciful has taken a son." Exalted is He! Rather, they1 are [but] honored servants.

இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் வானவர்களை மகள்களாக ஆக்கிக் கொண்டான், என்று.” அவர்கள் கூறும் பொய்களைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன். மாறாக வானவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமான, கண்ணியமான அடியார்களாவர்.

21:27Page 324

لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ ٢٧

They cannot precede Him in word, and they act by His command.

அவர்கள் தங்கள் இறைவனை முந்திப் பேச மாட்டார்கள். அவன் கட்டளையிடும்வரை எதுவும் பேச மாட்டார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைப்படியே செயல்படுகிறார்கள். அவனது கட்டளைக்கு மாறுசெய்யமாட்டார்கள்.

21:28Page 324

يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ وَهُم مِّنۡ خَشۡيَتِهِۦ مُشۡفِقُونَ ٢٨

He knows what is [presently] before them and what will be after them,1 and they cannot intercede except on behalf of one whom He approves. And they, from fear of Him, are apprehensive.

அவன் அவர்களின் முந்தைய மற்றும் பிந்தைய செயல்கள் அனைத்தையும் அறிவான். யாருக்குப் பரிந்துரை கிடைக்க வேண்டுமென விரும்புகிறானோ அவனுக்கு அவனுடைய அனுமதியின்றி அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். அவர்கள் அவன் மீதுள்ள அச்சத்தால் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் அவனுடைய கட்டளைக்கும், விலக்கல்களுக்கும் மாறாகச் செயல்படுவதில்லை.

21:29Page 324

۞ وَمَن يَقُلۡ مِنۡهُمۡ إِنِّيٓ إِلَٰهٞ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجۡزِيهِ جَهَنَّمَۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ٢٩

And whoever of them should say, "Indeed, I am a god besides Him" - that one We would recompense with Hell. Thus do We recompense the wrongdoers.

வானவர்களில் யாரேனும், “அல்லாஹ்வை விடுத்து நான்தான் இறைவனாவேன்” என்று கூறியதாக வைத்துக்கொண்டால் நிச்சயமாக நாம் அதற்குத் தண்டனையாக மறுமை நாளில் நிரந்தரமான நரக வேதனையை அளிப்போம். இவ்வாறே நாம் அல்லாஹ்வை நிராகரித்து இணைவைக்கும் அநியாயக்காரர்களுக்கு தண்டனை வழங்குகிறோம்.

21:30Page 324

أَوَلَمۡ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ كَانَتَا رَتۡقٗا فَفَتَقۡنَٰهُمَاۖ وَجَعَلۡنَا مِنَ ٱلۡمَآءِ كُلَّ شَيۡءٍ حَيٍّۚ أَفَلَا يُؤۡمِنُونَ ٣٠

Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and then We separated them and made from water every living thing? Then will they not believe?

நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. மழை இறங்குவதற்கு அவற்றிற்கிடையே எந்த இடைவெளியும் இருக்கவில்லை. எனவே நாம்தாம் அவற்றைப் பிரித்தோம் என்பதையும் நாம் விலங்கு அல்லது தாவரம் ஆகிய ஒவ்வொரு பொருளையும் வானத்திலிருந்து இறங்கும் நீரால் படைத்துள்ளோம் என்பதையும் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அறியவில்லையா? அவற்றைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெற்று, அல்லாஹ் ஒருவன் மீது நம்பிக்கைகொள்ளமாட்டார்களா?

21:31Page 324

وَجَعَلۡنَا فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِهِمۡ وَجَعَلۡنَا فِيهَا فِجَاجٗا سُبُلٗا لَّعَلَّهُمۡ يَهۡتَدُونَ ٣١

And We placed within the earth firmly set mountains, lest it should shift with them, and We made therein [mountain] passes [as] roads that they might be guided.

பூமி அதிலுள்ளவர்களினால் ஆட்டம் காணாமல் இருப்பதற்காக நாம் அதில் உறுதியான மலைகளை உருவாக்கியுள்ளோம். அவர்கள் தமது பயணங்களில் தாங்கள் விரும்பும் இடங்களுக்கான வழிகாட்டலைப் பெறும் பொருட்டு அதில் விசாலமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.

21:32Page 324

وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ ٣٢

And We made the sky a protected ceiling, but they, from its signs,1 are turning away.

தூண்களின்றி விழுந்துவிடுவதிலிருந்தும், திருட்டுத்தனமாக ஒட்டுக்கேட்பதிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட கூரையாக நாம் வானத்தை அமைத்துள்ளோம். இணைவைப்பாளர்கள் வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் போன்ற சான்றுகளைப் புறக்கணித்து படிப்பினை பெறாமல் இருக்கிறார்கள்.

21:33Page 324

وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ٣٣

And it is He who created the night and the day and the sun and the moon; all [heavenly bodies] in an orbit are swimming.

அல்லாஹ்தான் இரவை ஓய்வெடுப்பதற்காகவும் பகலை சம்பாதிப்பதற்காகவும் அமைத்துள்ளான். அவன் சூரியனை பகலுக்கு ஆதாரமாகவும் சந்திரனை இரவுக்கு ஆதாரமாகவும் அமைத்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் தன் குறிப்பிட்ட வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதைவிட்டு நகர்ந்துவிடுவதுமில்லை, சாய்ந்துவிடுவதுமில்லை.

21:34Page 324

وَمَا جَعَلۡنَا لِبَشَرٖ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَٰلِدُونَ ٣٤

And We did not grant to any man before you eternity [on earth]; so if you die - would they be eternal?

தூதரே!- உமக்கு முன்னால் எந்த மனிதருக்கும் நாம் இந்த வாழ்க்கையில் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. இந்த வாழ்க்கையில் உமக்கு வழங்கப்பட்ட தவணை நிறைவடைந்து நீர் மரணித்துவிட்டால் அவர்கள் மட்டும் உமக்குப் பிறகு நிரந்தரமாக நிலைத்திருப்பார்களா என்ன? ஒருபோதும் இல்லை.

21:35Page 324

كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةٗۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ ٣٥

Every soul will taste death. And We test you with evil and with good as trial; and to Us you will be returned.

நம்பிக்கைகொண்ட ஆன்மா, நிராகரித்த ஆன்மா என ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் மரணித்தை சுவைத்தே தீர வேண்டும். -மனிதர்களே!- இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு கடமைகளையும் அருட்கொடைகளையும் வேதனைகளையும் அளித்து சோதிக்கின்றோம். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு நம்மிடமே திரும்பிவர வேண்டும். ஏனையவர்களிடம் அல்ல. நாம் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவோம்.

21:36Page 325

وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي يَذۡكُرُ ءَالِهَتَكُمۡ وَهُم بِذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ هُمۡ كَٰفِرُونَ ٣٦

And when those who disbelieve see you, [O Muḥammad], they take you not except in ridicule, [saying], "Is this the one who mentions [i.e., insults] your gods?" And they are, at the mention of the Most Merciful, disbelievers.

தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் உம்மைப் பார்த்தால் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இவர்தான் நீங்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டக்கூடியவரா?” என்று கூறி தங்களைப் பின்பற்றுபவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் உம்மைப் பரிகாசம் செய்வதுடன் அவர்களுக்காக இறக்கப்பட்ட குர்ஆனையும் மறுத்து, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளையும் மறுக்கிறார்கள். எனவே அனைத்துத் தீமைகளும் ஒன்றுசேர இருப்பதால் அவர்களே குறை கூறப்பட மிகத் தகுதியானவர்கள்.

21:37Page 325

خُلِقَ ٱلۡإِنسَٰنُ مِنۡ عَجَلٖۚ سَأُوْرِيكُمۡ ءَايَٰتِي فَلَا تَسۡتَعۡجِلُونِ ٣٧

Man was created of haste [i.e., impatience]. I will show you My signs [i.e., vengeance], so do not impatiently urge Me.

மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவன் விஷயம் நிகழ்வதற்கு முன்னரே அதை விரைவாக வேண்டுகிறான். அதனால்தான் இணைவைப்பாளர்கள் வேதனையை விரைவாக வேண்டுகிறார்கள். -என் வேதனைக்காக அவசரப்படக்கூடியவர்களே!- நான் உங்களுக்கு நீங்கள் அவசரப்படும் வேதனையைக் காட்டுவேன். எனவே அதனை அவசரமாக வேண்டாதீர்கள்.

21:38Page 325

وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٣٨

And they say, "When is this promise, if you should be truthful?"

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்கள் அவசரப்பட்டு கேட்கிறார்கள்: -“முஸ்லிம்களே!- இறந்தபின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழும் என்று எங்களுக்கு வாக்களித்த உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது எப்போது நிகழும்? என்பதைக் கூறுங்கள்.”

21:39Page 325

لَوۡ يَعۡلَمُ ٱلَّذِينَ كَفَرُواْ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمۡ وَلَا هُمۡ يُنصَرُونَ ٣٩

If those who disbelieved but knew the time when they will not avert the Fire from their faces or from their backs and they will not be aided...1

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளை மறுக்கும் இந்த நிராகரிப்பாளர்கள் அப்போது தங்கள் முகங்களையும் முதுகுகளையும் விட்டு நரக நெருப்பைத் தடுக்க முடியாது என்பதையும் அந்நாளில் அவர்களுக்கு வேதனையை தடுத்து யாரும் உதவிசெய்ய முடியாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுமே!. இதை அவர்கள் உறுதியாக அறிந்தால் வேதனையை விரைவாக வேண்ட மாட்டார்கள்.

21:40Page 325

بَلۡ تَأۡتِيهِم بَغۡتَةٗ فَتَبۡهَتُهُمۡ فَلَا يَسۡتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمۡ يُنظَرُونَ ٤٠

Rather, it will come to them unexpectedly and bewilder them, and they will not be able to repel it, nor will they be reprieved.

நெருப்பைக்கொண்டு செய்யப்படும் இந்த வேதனை அவர்கள் அறிந்த நிலையில் அவர்களிடம் வராது. மாறாக திடீரென அவர்களிடம் வரும். அவர்கள் அதனைத் தடுக்க சக்திபெறமாட்டார்கள். பாவமன்னிப்புக் கோரி அருளைப் பெறும் அளவுக்கு அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.

21:41Page 325

وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٤١

And already were messengers ridiculed before you, but those who mocked them were enveloped by what they used to ridicule.

தூதரே!- உம் சமூகம் உம்மை பரிகாசம் செய்தால் நீர் ஒன்றும் அதற்குப் புதுமையானவர் அல்ல. உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்களை வேதனை சூழ்ந்துகொண்டது. அதனைக் கொண்டு அவர்களது தூதர்கள் அவர்களை அச்சுறுத்திய போது அதனை அவர்கள் இவ்வுலகில் பரிகாசம் செய்துகொண்டிருந்தனர்.

21:42Page 325

قُلۡ مَن يَكۡلَؤُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحۡمَٰنِۚ بَلۡ هُمۡ عَن ذِكۡرِ رَبِّهِم مُّعۡرِضُونَ ٤٢

Say, "Who can protect you at night or by day from the Most Merciful?" But they are, from the remembrance of their Lord, turning away.

தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “அளவிலாக் கருணையாளன் உங்கள் மீது வேதனையை இறக்கி உங்களை அழிக்க நாடினால் இரவிலும் பகலிலும் உங்களைப் பாதுகாப்பவர் யார்? மாறாக அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரைகளை நினைவுபடுத்துவதையும் அவனின் ஆதாரங்களையும் புறக்கணிக்கிறார்கள். அறியாமையினால் அவர்கள் அவற்றைக்குறித்து எதையும் சிந்திப்பதில்லை.

21:43Page 325

أَمۡ لَهُمۡ ءَالِهَةٞ تَمۡنَعُهُم مِّن دُونِنَاۚ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَ أَنفُسِهِمۡ وَلَا هُم مِّنَّا يُصۡحَبُونَ ٤٣

Or do they have gods to defend them other than Us? They are unable [even] to help themselves, nor can they be protected from Us.

அல்லது நம்முடைய வேதனையிலிருந்து அவர்களை தடுக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவை தங்களுக்குக்கூட நன்மையளிக்கவோ தீங்கினை அகற்றவோ சக்திபெற மாட்டா. தமக்குக்கூட உதவிசெய்ய முடியாதவை எவ்வாறு மற்றவர்களுக்கு உதவிசெய்யும்? அவர்கள் நம்முடைய வேதனையை விட்டும் பாதுகாக்கப்படவும் மாட்டார்கள்.

21:44Page 325

بَلۡ مَتَّعۡنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ طَالَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۗ أَفَلَا يَرَوۡنَ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَآۚ أَفَهُمُ ٱلۡغَٰلِبُونَ ٤٤

But, [on the contrary], We have provided good things for these [disbelievers] and their fathers until life was prolonged for them. Then do they not see that We set upon the land, reducing it from its borders?1 Is it they who will overcome?

மாறாக இந்த நிராகரிப்பாளர்களையும் அவர்களின் முன்னோர்களையும் விட்டுப்பிடிக்கும் பொருட்டு நாம் அருட்கொடைகளை அள்ளி வழங்கி நீண்ட காலம் வரைக்கும் அனுபவிக்கச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் ஏமாந்து, தங்களின் நிராகரிப்பில் நிலைத்துவிட்டார்கள். நம் அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்து நம் வேதனையை விரைவாக வேண்டும் இவர்கள், நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறத்திலிருந்து, அதிலுள்ளவர்களை அடக்கி, வென்று, குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதைக் கவனித்து, மற்றவர்களுக்கு ஏற்பட்டது இவர்களுக்கும் ஏற்படாமலிருக்க, படிப்பினை பெறமாட்டாரகளா? இவர்கள் ஒருபோதும் மிகைப்பவர்களல்ல. மாறாக அவர்கள் மிகைக்கப்படுபவர்களே.

21:45Page 326

قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ ٤٥

Say, "I only warn you by revelation." But the deaf do not hear the call when they are warned.

தூதரே!- நீர் கூறுவீராக: “-மக்களே!- என் இறைவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து நான் உங்களை எச்சரிக்கிறேன். ஆயினும் சத்தியத்தை செவியேற்காத செவிடர்களுக்கு, அல்லாஹ்வின் வேதனையைக்கொண்டு எச்சரிக்கப்பட்டால், அவர்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்க மாட்டார்கள்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском