Al-Mukhtasar'Abasa · 80:1–42

Al-Mukhtasar · Tafsir · in Tamil

عبس

'Abasa

He Frowned · Meccan · 42 ayahs

80:1Page 585

عَبَسَ وَتَوَلَّىٰٓ ١

He [i.e., the Prophet (ﷺ) ] frowned and turned away

அல்லாஹ்வின் தூதர் முகம் கடுகடுத்தார்; புறக்கணித்தார்,

80:2Page 585

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ٢

Because there came to him the blind man,1 [interrupting].

நேர்வழியை நாடி அப்துல்லாஹ் இப்னு உம்மீ மக்தூம் அவரிடம் வந்ததற்காக. பார்வையற்றவராக இருந்த அவர் தூதர் இணைவைப்பாளர்களின் தலைவர்கள் நேர்வழி பெறவேண்டுமென்று ஆசைகொண்டவராக அவர்களை அழைப்பதில் ஈடுபட்டிருந்த போது வந்தார்.

80:3Page 585

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣

But what would make you perceive, [O Muḥammad], that perhaps he might be purified1

தூதரே!- உமக்கு என்ன தெரியும்? இந்தப் பார்வையற்றவர் பாவங்களிலிருந்து தூய்மை பெறலாம்.

80:4Page 585

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ٤

Or be reminded and the remembrance would benefit him?

அல்லது அவர் உம்மிடமிருந்து செவியேற்கும் அறிவுரைகளைக் கொண்டு பயன் பெறலாம்.

80:5Page 585

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ٥

As for he who thinks himself without need,1

யார் நீர் கொண்டுவந்ததன்மீது நம்பிக்கைகொள்ளாமல் செல்வமிருப்பதால் தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ.

80:6Page 585

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦

To him you give attention.

நீர் அவன் பக்கம் முன்னோக்குகின்றீர்.

80:7Page 585

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ٧

And not upon you [is any blame] if he will not be purified.1

அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி பாவங்களிலிருந்து தூய்மையடையவில்லையெனில் உமக்கு என்னதான் நேரப்போகிறது?.

80:8Page 585

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ٨

But as for he who came to you striving [for knowledge]

யார் நன்மையைத் தேடியவராக உம் பக்கம் ஓடோடி வந்தாரோ.

80:9Page 585

وَهُوَ يَخۡشَىٰ ٩

While he fears [Allāh],

அவர் தம் இறைவனை அஞ்சியவராகவும் இருக்கின்றார்.

80:10Page 585

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ١٠

From him you are distracted.

நீர் அவரின்பால் பராமுகமாக இருந்து அவர் அல்லாத இணைவைப்பாளர்களின் தலைவர்களின் பக்கம் கவனம் செலுத்துகின்றீர்.

80:11Page 585

كـَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ١١

No! Indeed, they [i.e., these verses] are a reminder;

விஷயம் அவ்வாறு அல்ல. நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலுமாகும்.

80:12Page 585

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢

So whoever wills may remember it.1

யார் அல்லாஹ்வை நினைவுகூர விரும்புவாரோ அவரே அவனை நினைவுகூர்ந்து இந்தக் குர்ஆனில் உள்ளவற்றின் மூலம் அறிவுரை பெறுவார்.

80:13Page 585

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ١٣

[It is recorded] in honored sheets,

இந்தக் குர்ஆன் வானவர்களிடத்தில் கண்ணியமான ஏடுகளில் உள்ளது.

80:14Page 585

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ١٤

Exalted and purified,

அவை உயரமான இடத்திலிருக்கும் உயர்வானவை; அசுத்தம் எதுவும் அண்டாத அளவுக்குத் தூய்மையானவை.

80:15Page 585

بِأَيۡدِي سَفَرَةٖ ١٥

[Carried] by the hands of messenger-angels,

அவை வானவர்களில் உள்ள தூதர்களின் கைகளில் இருக்கின்றன.

80:16Page 585

كِرَامِۭ بَرَرَةٖ ١٦

Noble and dutiful.

அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் கண்ணியமானவர்கள், நன்மையான செயல்களை, வணக்கவழிபாடுகளை அதிகம் செய்யக்கூடியவர்கள்.

80:17Page 585

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ١٧

Destroyed [i.e., cursed] is man;1 how disbelieving is he.

நிராகரித்த மனிதன்மீது சாபம் உண்டாகட்டும். அவன் அல்லாஹ்வை எவ்வளவு கடுமையான நிராகரிக்கிறான்!

80:18Page 585

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ١٨

From what thing [i.e., substance] did He create him?

அவனை அல்லாஹ் எப்பொருளிலிருந்து படைத்தான், பூமியில் கர்வம்கொண்டு அவனை நிராகரிப்பதற்கு?

80:19Page 585

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩

From a sperm-drop He created him and destined for him;1

சிறிது நீரிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான். அவனது படைப்பை ஒவ்வொரு கட்டம் கட்டமாக நிர்ணயம் செய்தான்.

80:20Page 585

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠

Then He eased the way for him;1

பின்னர் இந்த நிலைகளுக்குப் பிறகு தன் தாயின் வயிற்றிலிருந்து வெளிப்படுவதை அவனுக்கு எளிதாக்கினான்.

80:21Page 585

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ٢١

Then He causes his death and provides a grave for him.1

பின்னர் உலகில் அவனுக்கு வாழ்நாளின் வயதை நிர்ணயித்த பிறகு அவனை மரணிக்கச் செய்தான். மீண்டும் எழுப்பப்படும் வரை அவன் தங்கியிருக்கும் மண்ணறையை அவனுக்காக ஏற்படுத்தினான்.

80:22Page 585

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢

Then when He wills, He will resurrect him.

பின்னர் அவன் நாடும் போது விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் அவனை உயிர்கொடுத்து எழுப்புகிறான்.

80:23Page 585

كـَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ٢٣

No! He [i.e., man] has not yet accomplished what He commanded him.

இந்த நிராகரிப்பாளன் தான் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டதாக எண்ணுகிறான். அவ்வாறு அல்ல விடயம். அவன் அல்லாஹ் தன்மீது கடமையாக்கிய கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை.

80:24Page 585

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤

Then let mankind look at his food -

அல்லாஹ்வை நிராகரித்த மனிதன் தான் உண்ணுகின்ற உணவைப் பார்க்கட்டும், அது எவ்வாறு கிடைத்தது என்று.

80:25Page 585

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ٢٥

How We poured down water in torrents,

அதன் மூலம், வானத்திலிருந்து பலமாக, அடர்த்தியாகப் பொழியும் மழையே.

80:26Page 585

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ٢٦

Then We broke open the earth, splitting [it with sprouts],

பின்னர் பூமியைப் பிளந்தோம். அதிலிருந்து தாவரம் முளைக்கிறது.

80:27Page 585

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ٢٧

And caused to grow within it grain

அதில் நாம் கோதுமை, சோளம் போன்ற ஏனைய தானியங்களையும் முளைக்கச் செய்தோம்.

80:28Page 585

وَعِنَبٗا وَقَضۡبٗا ٢٨

And grapes and herbage

திராட்சையையும், அவர்களின் கால்நடைகளுக்கு தீவனமாக அமையும் பொருட்டு பச்சைக் காய்கறிகளையும் முளைக்கச் செய்தோம்.

80:29Page 585

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ٢٩

And olive and palm trees

அதில் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.

80:30Page 585

وَحَدَآئِقَ غُلۡبٗا ٣٠

And gardens of dense shrubbery

அதில் அடர்ந்த மரங்களுடைய தோட்டங்களையும் முளைக்கச் செய்தோம்.

80:31Page 585

وَفَٰكِهَةٗ وَأَبّٗا ٣١

And fruit and grass -

பழங்களையும் உங்கள் கால்நடைகள் மேயக்கூடியதையும் நாம் விளையச் செய்தோம்.

80:32Page 585

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٢

[As] enjoyment [i.e., provision] for you and your grazing livestock.

உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு.

80:33Page 585

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣

But when there comes the Deafening Blast1

காதுகளைச் செவிடாக்கும் பெரும் சப்தமான இரண்டாவது சூர் ஊதப்பட்டால்.

80:34Page 585

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ٣٤

On the Day a man will flee from his brother

அந்த நாளில் மனிதன் தன் சகோதரனைவிட்டும் விரண்டோடுவான்.

80:35Page 585

وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥

And his mother and his father

தன் தாய், தந்தையரை விட்டும் விரண்டோடுவான்.

80:36Page 585

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦

And his wife and his children,

தன் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டும் வெருண்டோடுவான்.

80:37Page 585

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ٣٧

For every man, that Day, will be a matter adequate for him.1

அந்த நாளின் துன்பத்தின் கடுமையினால் ஒவ்வொருவரும் மற்றவரில் கவனம் செலுத்த முடியாது.

80:38Page 585

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ٣٨

[Some] faces, that Day, will be bright -

அந்நாளில் நற்பாக்கியசாலிகளின் முகங்கள் பிரகாசமானதாக இருக்கும்.

80:39Page 585

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ٣٩

Laughing, rejoicing at good news.

அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தியுள்ள அவனின் அருளினால் சிரித்தவையாக, மகிழ்ச்சியானவையாக இருக்கும்.

80:40Page 585

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ٤٠

And [other] faces, that Day, will have upon them dust.

அந்நாளில் துர்பாக்கியசாலிகளின் முகங்கள் புழுதிபடிந்தவையாக இருக்கும்.

80:41Page 585

تَرۡهَقُهَا قَتَرَةٌ ٤١

Blackness will cover them.

இருள் அவற்றைக் சூழ்ந்திருக்கும்.

80:42Page 585

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ٤٢

Those are the disbelievers, the wicked ones.

இந்நிலைமையில் வர்ணிக்கப்பட்ட இவர்கள்தாம் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஒன்று சேர்ந்தவர்கள்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском